உலகளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல்வேறு டெக் ஜாம்பவான்கள் தொடங்கி, சிறுசிறு நிறுவனங்கள் வரையில் பணி நீக்க நடவடிகையினை கையில் எடுத்துள்ளது. இது செலவு குறைப்பின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டாலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களது வேதனைகளை சமூக வலைதளங்களில் கொட்டி வருகின்றனர்.
சில தினங்களுக்கு கூகுள் நிறுவனமும் தங்களது 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. அதில் இருந்தே ஊழியர்கள் படிப்படியாக பணி நீக்கம் செய்யப்படும் செய்திகளும் வெளியாகி வருகின்றன.
நள்ளிரவில் பணி நீக்கம்
இது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 16 வருடங்களாக பணி புரிந்தவர்கள் கூட நள்ளிரவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கிடையில் பிரசவ விடுமுறைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள ஒரு பெண், கூகுள் நிறுவனம் தன்னை பணி நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண் பணி நீக்கம்
பிரசவ கால விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணுக்கு, நிறுவனம் எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்பது போல பணி நீக்கம் செய்துள்ளது. பிரசவத்தினை எதிர் நோக்கியுள்ள தனக்கு எப்படி, புதிய வேலை உடனடியாக கிடைக்கும் என கவலையில் உள்ள அந்த பெண், தனது வேதனையை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதயமே கனத்து விட்டது
அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த கேதரின் வாங் தான் அந்த பெண். அவர் புரோகிராம் மேலாளராக பணி புரிந்து வந்தார். 8 மாத கர்ப்பிணியான உள்ளவராவர். தனது குழந்தையின் வருகைக்காக சந்தோஷத்தில் இருந்த நிலையில், நிறுவனத்தின் பணி நீக்க மெயிலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்ததாகவும், எனது இதயம் கனத்துவிட்டது என்றும் தனது லிங்க்ட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜீரணிக்கவே முடியவில்லை
மேலும் எனது செயல்பாடுகள் திருப்தியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், எனக்கு இப்படி ஒரு செய்தி கிடைத்ததை என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. ஒரு புரோகிராம் மேலாளராக திட்டமிடலே என் உள்ளுணர்வாக இருந்தது. ஆனால் நான் கையாண்டதிலேயே இது தான் மிகவும் கடினமான வேலையாக இருந்தது. அதிலும் பணி நீக்கம் செய்யப்பட்ட காலம் மிக கடினமானதொரு காலம்.
கைகள் நடுங்குகின்றன
34 வார கர்பிணியாக உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வேலை கிடைக்குமா? அது உடனடியாக என்பது நடக்காத ஒரு காரியம். நான் மகப்பேறு கால விடுமுறையில் செல்லவுள்ள நிலையில் இப்படி ஒரு அறிவிப்பு எனக்கு மிக வேதனை அளிக்கிறது.
நாள் முழுக்க எனக்கு கால்களும், செய்திகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. மக்கள் எனது குழந்தையின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். நான் குழந்தையின் நலன் கருதி எதிர்மறையான எண்ணங்கள் இல்லாமல் இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால் இன்னும் கூட என் கைகள் நடுங்குகின்றன.
உணர்வு பூர்வமான பதிவு
என் குழந்தை முழு ஆரோக்கியத்துடன் இவ்வுலகினை எட்டி பார்க்க வேண்டும். ஆக நான் உறுதியாக இருக்க முயற்சி செய்கிறேன். நான் அதனை சிறப்பாக நிறைவேற்ற முயற்சி செய்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. கூகுளில் நான் இருந்த காலத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்கும், வளர்ச்சிக்கும் நன்றி. நான் நம்புகிறேன் இதுவும் கடந்துபோகும் என உணர்வுபூர்வமான ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications