மியான்மர் 2023 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளராக உயர்ந்துள்ளது, பொதுவாக ஓபியம் உற்பத்தியில் ஆப்கானிஸ்தான் நாடு தான் முன்னோடியாக இருக்கும், ஆனால் தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அந்நாட்டின் ஓபியம் எனப்படும் அபின் தயாரிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் மியான்மர் 1,080 மெட்ரிக் டன் ஓபியத்தை உற்பத்தி செய்தது உலகின் மிகப்பெரிய ஓபியம் உற்பத்தியாளராக உயர்ந்துள்ளது என ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஒபியம் தான் ஹெராயின் தயாரிப்புக்கான மூலப்பொருளாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கசகசா சாகுபடிக்கு தலிபான் தடை விதித்ததைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் ஓபியம் உற்பத்தி 95 சதவீதம் சரிந்து தற்போது வெறும் 330 டன்னாகக் குறைந்துள்ளது என UNODC தெரிவித்துள்ளது.
Golden Triangle எனக் கூறப்படும் மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து இடையேயான எல்லைப் பகுதி நீண்ட காலமாகச் சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் மையமாக உள்ளது. குறிப்பாக மெத்தாம்பேட்டமைன் மற்றும் ஓபியம் ஆகிய பொருட்கள் இப்பகுதியில் அதிகளவில் கடத்தப்படுகிறது.
அதீத ஓபியம் உற்பத்தி மூலம் மியான்மர் நாட்டின் "ஓபியம் பொருளாதாரத்தின்" மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர் முதல் 2.4 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இது அந்நாட்டின் 2022 GDP-யில் 1.7 முதல் 4.1 சதவிகிதத்திற்கு இணையான அளவீடு என்று UNODC தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, மியான்மர் நாட்டில் 790 மெட்ரிக் டன் ஓபியம் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டில் 1,080 மெட்ரிக் டன் ஓபியம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. 2021 ஆம் ஆண்டு மியான்மர் நாட்டின் அரசை ராணுவம் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டு விவசாயிகள் ஓபியம் தயாரிக்கக் கசகசா சாகுபடி செய்யத் துவங்கியுள்ளனர்.
இதேபோல் கடந்த 20 வருடத்தில் உலகளவில் 2022-23 ஆம் நிதியாண்டில் அதிகப்படியான ஓபியம் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் ஐநா-வின் UNODC அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் மியான்மர் நாட்டில் கசகசா சாகுபடியில் அதிகளவிலான முதலீடு செய்யப்படுவதோடு, புதிய மற்றும் மேம்பட்ட விவசாய முறைகள், உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மியான்மர் நாட்டில் Shan என்னும் பகுதியில் தான் அதிகப்படியாக ஓபியம் தயாரிக்கப்படுகிறது. Shan பகுதியில் சுமார் 88 சதவீத நிலத்தில் அதாவது 1.02 லட்சம் ஏக்கர் அளவில் கசகசா சாகுபடி செய்யப்பட்டு அதன் வாயிலாக ஓபியம் தயாரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications