மியான்மரில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, பிற்பகல் 12:50 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து மற்றொரு நிலநடுக்கமும் வந்தது.
இந்த 2 நிலநடுக்கம் மியான்மரில் பல இடங்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமாக நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மூலம் பாங்காங்-ல் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. காவல்துறை மற்றும் மருத்துவ அதிகாரிகள் அளித்த தகவலின்படி, 43 கட்டுமான தொழிலாளர்கள் இக்கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

மேலும் மியான்மர் தலைநகர் Naypyidaw-வில் சாலைகள் பிளவுபட்டது, இதனால் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த 7.7 ரிக்டர் நிலநடக்கத்தால் எத்தனை பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது முழுமையாக தெரியவில்லை.
மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து வரை இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட மையப்பகுதி Sagaing என்னும் பகுதியில் இருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கொல்கத்தா மற்றும் இம்பால் நகரங்களில் லேசான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. கொல்கத்தாவில் வசிப்பவர்கள் சுவர்களில் தொங்கவிடப்பட்ட பொருட்கள் லேசாக அசைந்ததை உணர்ந்ததாக தெரிவித்தனர். ஆனால் நகரத்தில் எந்தவிதமான சொத்து சேதமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்பதை பிடிஐ தகவல்கள் உறுதிப்படுக்கின்றன.
மேலும் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பாலில், குறிப்பாக பல பழைய பல மாடி கட்டிடங்கள் அமைந்துள்ள தங்கல் பஜார் பகுதியில், நிலநடுக்க அதிர்வுகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்திலும் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தலைநகர் பெய்ஜிங்கின் நிலநடுக்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications