மிந்த்ராவையும் விட்டு வைக்காத கும்பல்.. ரீபண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி பலே மோசடி!

சமீபகாலமாக மோசடி தொடர்பான செய்திகள் அதிக அளவில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான மிந்த்ராவையும் விட்டு வைக்கவில்லை. மிந்த்ரா நிறுவனம் சமீபத்தில் பெங்களூரு முழுவதும் மோசடியான ஆர்டர்களைப் பெற்று ரூ.1.1 கோடியை இழந்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் அறிக்கையின் படி மோசடிக்காரர்கள் மிந்த்ரா தளத்தினை பயன்படுத்தி ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்கு பொய்யாக ரீஃபண்ட் பெற்று ஏமாற்றியுள்ளனர்.

மிந்த்ரா தளத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் 5,529 ஆர்டர்கள் பெங்களூருவில் இருந்து மட்டும் பெறப்பட்டுள்ளன. மிந்த்ரா நிறுவனத்தின் புகார்படி ஏமாற்றுகாரர்கள் விலை உயர்ந்த பிராண்டட் காலணிகள், உடைகள், அணிகலன்கள் என மொத்தமாக ஆர்டர் செய்து பேமெண்ட் செலுத்தி பொருட்களை பெற்றுள்ளனர்.

 மிந்த்ராவையும் விட்டு வைக்காத கும்பல்.. ரீபண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி பலே மோசடி!

அதன் பிறகு சில பொருட்கள் வரவில்லை என்று கூறியும், ஆர்டர் செய்தது ஒன்று தங்களுக்கு கிடைத்த ப்ராடக்ட் ஒன்று என்று கூறியும் ப்ராடக்ட்டை ரிட்டன் செய்துள்ளனர். இதுபோன்ற கோரிக்கைகள் வரும் பட்சத்தில் மந்த்ரா நிறுவனம் ரீஃபண்ட் தொடர்பான செயல் முறையை தொடங்கும். இப்படி இந்த தளத்தில் கோரிக்கை எழுப்பி ஏமாற்றி உள்ளனர். நடந்த மோசடி குறித்து விளக்கம் அளித்த ஒரு காவல்துறை அதிகாரி, "ஒரு நபர் 10 ஜோடி பிராண்டட் ஷூக்களை ஆர்டர் செய்கிறார் என்றால் பார்சலை பெற்ற பிறகு அதில் வெறும் 5 ஜோடி ஷூ மட்டுமே இருப்பதாகக் கூறி ஏமாற்றுகின்றனர். இந்த வகையில் தான் இந்த மோசடி நடைபெற்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதே போல துணிகளையும் ஆர்டர் செய்து சில மோசடிக்காரர்கள் ரீபண்ட் பெற்று ஏமாற்றியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து பேசிய மிந்த்ரா நிறுவனத்தின் டிசைன்ஸ் என்போர்ஸ்மென்ட் ஆபிசரான சர்தார்.. இது போன்ற மோசடிகள் ஆடிட்டிங்-கின் போது வெளிச்சத்திற்கு வந்ததாக தெரிவித்தார். நாடு முழுவதும் மோசடி ஆர்டர்களால் மிந்த்ரா நிறுவனம் எதிர்கொள்ளும் இழப்புக்கு வழிவகை செய்யும் வகையில் புகார் அளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்த மோசடியில் ராஜஸ்தானைச் சேர்ந்த கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்த விசாரணையை நடத்தி வருவதாகவும் பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். முன்பு அப்பாவி மக்களை ஏமாற்றி வந்த கும்பல் தற்போது இ-காமர்ஸ் தளங்களையும் விட்டு வைக்காமல் தங்களுடைய விளையாட்டை தொடங்கியுள்ளனர். இதுபோன்ற விஷயங்களுக்கு எதிராக காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+