கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் சேவைக்குத் தடைவிதிக்கப்பட்டது இதனால் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. சில நாட்களுக்குப் பின்பு அத்தியாவசிய பொருட்களை மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு, ஜூன் மாதம் நாடு முழுவதும் லாக்டவுன் தளர்த்தப்பட்ட நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் அனைத்து பொருட்களையும் ஷாப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் இதைச் சரியான முறையில் பயன்படுத்தி விடவேண்டும் எனத் திட்டமிட்ட மிந்த்ரா, End of Reason என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை அறிவித்தது.
நீண்ட நாட்களாக ஷாப்பிங் செய்யாமல் இருந்த கைகள் தள்ளுபடி விற்பனையைப் பார்த்த உடனேயே ஆர்டர்களைக் குவிக்கத் துவங்கியது.
மிந்த்ரா
இந்தியாவின் மிகப்பெரிய பேஷன் ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் மிந்த்ரா-வின் இந்த End of Reason விற்பனை கொரோனா லாக்டவுனில் நடக்கும் முதல் ஆன்லைன் தள்ளுபடி என்பதால் ஆன்லைன் ஷாப்பிங்-ல் மோகம் கொண்ட மக்கள் அனைவரும் அதிரடியாகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஒரு நிமிடம்
இந்த End of Reason தள்ளுபடி விற்பனையில் அதிகப்படியாக ஒரு நிமிடத்திற்கு 18,800 ஆர்டர்கள் குவிந்துள்ளது என மிந்த்ரா தெரிவித்துள்ளது.
மேலும் இந்த விற்பனையில் மொத்தம் 35 லட்சம் பேர் 40 லட்சம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தியுள்ளது, மட்டும் அல்லாமல் கடந்த நிதிண்டின் விற்பனையை விடவும் 30 சதவீதம் அதிக வர்த்தகத்தை மிந்த்ரா நிறுவனத்திற்கு மக்கள் கொடுத்துள்ளனர்.
கொரோனாவும், லாக்டவுனும் இந்த விற்பனைக்கு எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
புதிய உச்சம்
இந்த விற்பனை காலத்தில் மட்டும் சுமார் 1.35 கோடி பேர் மிந்த்ரா தளத்திற்கு ஷாப்பிச் செய்ய வந்துள்ளார்கள், 12 கோடி முறை மிந்த்ரா தளம் வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்ய அனுமதித்துள்ளது. அதாவது இந்திய வாடிக்கையாளர்கள் மிந்த்ரா தளத்திற்குச் சுமார் 12கோடி முறை ஷாப்பிங் செய்ய வந்துள்ளார்கள்.
இதேபோல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 86 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும். இதுதான் மிந்த்ரா நிறுவனத்தின் வரலாற்று உச்சமாகவும் இருக்கிறது.
முக்கியப் பொருட்கள்
இந்தத் தள்ளுபடி விற்பனையில் ஆண்கள் பிரிவில் சுமார் 17 லட்சம் டி சர்ட்-ம், பெண்கள் பிரிவில் 8 லட்சம் குர்தா விற்பனை செய்யப்பட்டு முக்கிய வர்த்தகப் பொருளாக உள்ளது.
1,30,000 ரூபாய்க்கு வாட்ச்
மேலும் இந்தத் தள்ளுபடியில் அதிக விலைமதிப்புடைய பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆம், சுமார் 1.3 லட்சம் ரூபாய் மதிப்புடைய Raymond Weil வாட்ச் இந்தத் தள்ளுபடி விற்பனையில் முக்கிய அம்சமாக விளங்குகிறது என மிந்த்ரா தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications