டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் பங்குதாரர் பட்டியல் சில வருடங்களுக்கு முன்பு பொது சந்தைக்கு வெளியிடப்பட்ட போது, ஒரு விசித்திரமான மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது. விரேந்திர சிங் சௌஹான் என்ற அடையாளம் தெரியாத நபர், டாடா சன்ஸ் நிறுவனத்தில் வெறும் ஒரு பங்கை (share) மட்டுமே வைத்திருந்த உண்மை தான் அது.
மொத்த பங்குதாரர் பட்டியலைப் பார்க்கையில், டாடா குடும்பத்தினர் 8,235 பங்குகளையும், பல்வேறு டாடா நிறுவனங்கள் 49,365 பங்குகளையும், ஷாபூர்ஜி பல்லோஞ்சி குடும்பத்தினர் 74,352 பங்குகளையும், டாடா டிரஸ்ட்-கள் 266,610 பங்குகளையும் வைத்துள்ளனர். ஆனால், இந்த பெரிய பங்குதாரர்கள் தவிர, ஒரு நபர் மட்டும் ஒரு பங்கு வைத்திருந்தார்.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் மொத்தமே 404,146 பங்குகள் மட்டும் தான், இந்த 4 லட்சம் பங்குகள் கொண்ட டாடா சன்ஸ் நிறுவனம் 96 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்படும் வேளையில், ஒரு பங்கு விலையே லைப் செட்டிலாக போதுமானது.
டாடா சன்ஸ் நிறுவனத்தில் வெறும் 1 பங்கை வைத்திருக்கும் இந்த அடையாளம் தெரியாத நபர் யார்? பட்டியலிடப்படாத இந்த நிறுவனத்தில், எப்படி இந்த ஒரு பங்கைப் பெற்றார்? டாடா குடும்பத்திற்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே டாடா சன்ஸ் பங்குகள் வைத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரேந்திர சிங் சௌஹான் என்பவர் உண்மையான பெயர் மகாராஜா விரேந்திரசிங்ஜி நத்வர்சிங்ஜி சௌஹான் ஆவார். குஜராத்தில் உள்ள சோட்டா உதயப்பூர் என்ற சிறிய சமஸ்தானத்தை பிருத்விராஜ் சௌஹானின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்து வந்தனர். இந்த சமஸ்தானத்தின் ஆட்சியாளர்களான மகாராஜாக்கள் கலை மற்றும் கட்டிடக்கலைக்கு பெரிய அளவுக்கு ஆதரவு அளித்தவர்கள்.

1946 ஆம் ஆண்டு லிஸ்பனில் விடுமுறையில் இருந்தபோது மகாராஜா நத்வர்சிங்ஜி திடீரென காலமானார். இதையடுத்து, அவரது 11 வயது மகனான விரேந்திரசிங்ஜி அரசர் பட்டத்தை ஏற்றுக்கொண்டார். 1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில், பிற சமஸ்தானங்களைப் போலவே சோட்டா உதய்பூர் சமஸ்தானமும் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது, விரேந்திரசிங்ஜி இளம் வயதுடையவராக இருந்தார்.
1962 ஆம் ஆண்டு வெளியான எகனாமிக் வீக்லி இதழில், விரேந்திரசிங்ஜி "தொழிலதிபர் " என்று குறிப்பிடப்பட்டுள்ளார். மேலும், டாடா நிறுவனத்தால் ரோடியோ தயாரிக்க நிறுவப்பட்ட நேஷனல் எக்கோ என்னும் நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் இருந்தாக இந்த செய்தியில் இடம்பெற்று இருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு வெறும் 25 வயது தான் ஆகியிருக்கும் என்பது கூடுதல் தகவல். இதே சமயத்தில் தான், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பயிற்சி மாணவராக இருந்த ரத்தன் டாடாவுக்கு 25 வயதாகிறது.

விரேந்திரசிங்ஜி தனது 30 வயதின் தொடக்கத்தில், ரத்தன் டாடாவின் தந்தையான நவல் டாடாவின் கீழ், டாடா மில்ஸ் இயக்குநர் குழுவில் சேர்ந்தார். டாடா குடும்பத்தினர் சிலருடன் இணைந்து பல நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பணியாற்றினார். இதன் மூலம், காலப்போக்கில் அவர் நம்பகமான உள்வட்ட நபராக டாடா குழுமத்தில் மாறினார்.
அந்த காலகட்டத்தில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் சராசரி வருட சம்பளம் ரூ.42,000 ஆக இருந்த நிலையில், விரேந்திரசிங்ஜி-கிற்கு ஆண்டுதோறும் ரூ.212,000 மதிப்புள்ள செலவு செய்யும் உரிமை (Privy Purse) வழங்கப்பட்டது. இது அப்போதைய காலக்கட்டத்தில் மிகவும் அதிகமான தொகையாகும், மேலும், 1971 ஆம் ஆண்டு இந்திய அரச குடும்பங்களுக்கான சிறப்புரிமைகள் ரத்து செய்யப்படும் வரை, அவருக்கு அனைத்து ராஜ மரியாதையும் வழங்கப்பட்டது.
விரேந்திரசிங்ஜிக்கு 1980 களில் ஜேஆர்டி டாடாவுடனான நெருக்கமான தொடர்பு காரணமாக, "பன்னிரண்டு அல்லது பதின்மூன்று" டாடா சன்ஸ் பங்குகள் அவருக்கு வழங்கப்பட்டதாக அவரது மகன் ஜெய் பிரதாப் சிங்ஜி தெரிவித்துள்ளார்.
1998 ஆம் ஆண்டில், பெங்களூருவில் ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனத்தை நிறுவுவதற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக தனது டாடா சன்ஸ் பங்குகளை விற்பனை செய்ததாக அவரது மகன் கூறுகிறார். ஆயினும், ஒரு பங்கை மட்டும் விற்காமல் தன்னிடம் வைத்திருந்தார். இதன் மூலம், டாடா சன்ஸ் பங்கு வைத்திருக்கும் தனித்துவமான வாய்ப்பை இப்போதும் அனுபவிக்கிறது இந்த ராஜ குடும்பம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications