சட்டமன்ற தேர்தல் 2026: இந்த 6 தொகுதி மக்கள் என்ன செய்ய போறாங்களோ? உங்க தொகுதியும் லிஸ்ட்ல உண்டா?

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை சட்டமன்ற தேர்தல் நான்கு முனை போட்டி கொண்டதாக இருப்பதால் பலத்த எதிர்பார்ப்புகளை கொண்டதாக மாறி இருக்கிறது. ஒருபுறம் திமுக கூட்டணி , மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணி, மற்றொருபுறம் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என இந்த தேர்தல் அதிக சுவாரஸ்யம் நிறைந்ததாக உள்ளது.

முதன்முறையாக இந்த தேர்தலில் விஜய் நேரடியாக களம் காண்கிறார் என்பதால் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு எகிறுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்கள் யார், அவர்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழகத்தை தலையெழுத்தை தீர்மானிக்க போகும் தொகுதிகள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல் 2026: இந்த 6 தொகுதி மக்கள் என்ன செய்ய போறாங்களோ? உங்க தொகுதியும் லிஸ்ட்ல உண்டா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இந்த முறையும் கொளத்தூர் தொகுதியிலேயே களம் காண்கிறார். அந்த வகையில் தமிழ்நாட்டில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியாக கொளத்தூர் தொகுதி இருக்கிறது. அடுத்ததாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியிலே களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

சட்டமன்ற தேர்தல் 2026: இந்த 6 தொகுதி மக்கள் என்ன செய்ய போறாங்களோ? உங்க தொகுதியும் லிஸ்ட்ல உண்டா?

அந்த வகையில் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அனைத்து முதலமைச்சர் வேட்பாளர்களும் ஒரு தொகுதியில் போட்டியிடும் நிலையில் விஜய் இரண்டு தொகுதிகளை தேர்வு செய்துள்ளார். இரண்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டி இருக்கும். இந்த தேர்தலில் பாரம்பரியமாக இருக்கும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பார்களா, இவற்றுக்கு மாற்று என கூறும் நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளை ஆதரிப்பார்களா என்பது மே 4ஆம் தேதி தெரிந்துவிடும்.

எனவே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேனி, எடப்பாடி, காரைக்குடி, பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக இருக்கின்றன. இந்த 6 தொகுதி மக்கள் என்ன முடிவினை எடுக்க போகிறார்கள் என்பது தான் டாக் ஆஃப் தி டவுனாக உள்ளது.

இதற்கிடையே சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளைய தினம் தொடங்குகிறது. மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்ய முடியும். ஆனால் இதற்கிடையே நான்கு நாட்கள் மட்டுமே அலுவல் நாட்கள். இடையிடையே விடுமுறைகள் வருவதால் வேட்பாளர்கள் மார்ச் 30ஆம் தேதியான திங்கட்கிழமை , ஏப்ரல் 2 ஏப்ரல் 4 மற்றும் ஏப்ரல் 6 ஆகிய நான்கு நாட்களில் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுக்களை சமர்ப்பித்தாக வேண்டும்.

இந்த முறை ஆன்லைன் மூலமாகவும் வேப்பமனு தாக்கல் செய்வதற்கான வசதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6ஆம் தேதி சுப முகூர்த்த தினமாக இருப்பதால் அன்றைய தினம் ஏராளமானவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்பு இருக்கிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை வரும் 7ஆம் தேதி நடக்கும் வேட்பு மனுக்களை திரும்ப பெற 9ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+