தொலைநோக்குள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளருமான ரத்தன் டாடா இந்தியத் தொழில்துறையில் சிறப்பான இடத்தைப் பொறித்துள்ளார். டாடா சன்ஸ் குழுமத்தின் பெரும் வளர்ச்சிக்கு பின்னால் நிற்கும் அவரது உழைப்பு முக்கிய பங்கை வகிக்கிறது.
ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய வலது கரமாக விளங்கும் என் சந்திரசேகரன் டாடா சன்ஸ் மற்றும் டாடாவின் பிரமாண்டமான ரூ.11 லட்சம் கோடி சாம்ராஜ்ஜியத்தின் முக்கிய நபராகக் கருதப்படுகிறார்.

டாடா குரூப்பில் பங்கு: டாடா சன்ஸின் தலைவராக என் சந்திரசேகரன் டாடா குரூப்பின் பல்வேறு கம்பெனிகளின் போர்டுகளுக்கு தலைமை வகிக்கிறார். டாட ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் ஆகியவை இதில் அடங்கும். இந்த நிறுவனங்களின் வளர்ச்சியிலும் வெற்றிகளிலும் சந்திரசேகரன் முக்கியப் பங்கை ஆற்றி வருகிறார்.
குறிப்பிடத்தக்க பயணம்: இப்போது வகிக்கும் பதவிக்கு முன்பாக சந்திரசேகரன் டிசிஎஸ்ஸ்ஸுக்கு தலைமை தாங்கினார். டாடாவின் பிரதான நிறுவனமான டிசிஎஸ்ஸின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக அவரது தலைமையின் கீழ் குறிப்பிட சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் வேலைவாய்ப்பு நிறுவனமாகவும் அதிக விலை மதிப்புள்ள கம்பெனியாகவும் டிசிஎஸ் உருவெடுத்தது. டிசிஎஸ்ஸில் அவர் பணிக்காலத்தில் அதன் வருவாய் 16.5 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் ஐடி மற்றும் கன்சல்டிங் துறையில் உலகளவில் பிரபலமானது.
இன்டர்னிலிருந்து சேர்மன்: சந்திரசேகரனின் பயணம் டாடா குரூப்பில் எளிமையாக ஒரு இன்டர்னாக டிசிஎஸ்ஸில் 1987இல் தொடங்கியது. முப்பதாண்டுகளாக கடுமையான அர்ப்பணிப்பு, சிறப்பான செயல்பாடுகளால் அவர் டாடா சன்ஸின் தலைவர் பதவியை அடைந்தார்.
அவரது ஆழமான தாக்கம், அதிவேக வளர்ச்சியானது எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மற்றும் நுகர்வோர் இணைய தளங்கள் போன்ற புதிய முயற்சிகளில் பல்வகைப்படுத்தலில் தெளிவாகத் தெரிகிறது.
உருவாக்கிய மாற்றங்கள்: சந்திரசேகரனின் தலைமையின் கீழ் டாடா குரூப் டிஜிட்டல் மயம், நிலைத்தன்மை, சப்ளை செயின் விரிவாக்கம் போன்ற ஒரு பெரும் மாற்றத்துக்கு ஆளானது.
ஏர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தல், எதிர்காலத்துக்கு ஆயத்தமான துறைகளில் செயல்பாடு ஆகிய நடவடிக்கைகள் டாடா குரூப்பின் பிசினஸ் எல்லையை விரிவுபடுத்தியது.
வெகுமானம்: சந்திரசேகரனின் செல்வாக்கு போர்டுரூம்களையும் தாண்டி பெருகியது. அவரது வருட சம்பளம் ரூ.109 கோடியைத் தொட்டது. இதனால் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகி ஆனார்.
அவரது இந்த வெற்றி சொந்த வாழ்விலும் பிரதிபலித்து. மும்பையின் பெட்டர் ரோடில் ஒரு பிரமாண்டமான சொகுசு வீடு வாங்கினார்.
பயணச் சரித்திரம்: டாடா குரூப்பை புதிய விளிம்புகளுக்கு கொண்டு செல்லும் சந்திரசேகரன் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக விளங்குகிறார்.
தனது தொலைநோக்கு பார்வையினாலும் உழைப்பினாலும் தொழில்துறையில் முன்னோடியாக விளங்குகிறார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications