டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) ஆகியவை இணைந்து சர்வதேச எலக்ட்ரிக் வாகன (EV) சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் செய்யத் தயாராவது மட்டும் அல்லாமல், பெரும் புரட்சியைச் செய்ய திட்டமிட்டு உள்ளன. இதுக்குறித்து டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில், இரண்டு நிறுவனங்களும் உலகளாவிய விநியோகத்திற்காக இந்தியாவில் EVs உற்பத்தி செய்ய இணைந்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த கூட்டணி இரண்டு பிராண்டுகளின் பலத்தை பயன்படுத்தி சர்வதேச எலக்ட்ரிக் வாகன (EV) சந்தையில் பெரும் மாற்றத்தைச் செய்ய உள்ளது. டாடா மோட்டார்ஸ் அதன் குறைந்த செலவு கொண்ட உற்பத்தி திறன்களையும், JLR நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் டிசைன் நிபுணத்துவத்தை இணைத்து இந்திய மண்ணில் அதிநவீன எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இந்த கூட்டணி மூலம் உலகளவில் பல்வேறு சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு கவர்ச்சிகரமான தயாரிப்பை வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் உற்பத்தி செலவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால் சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் கார்களை விற்கவும் முடியும், அதேசமயம் அதிகப்படியான லாபத்தையும் இக்கூட்டணி பெற முடியும்.
சந்திரசேகரன் கூறுகையில், JLR இன் எலக்ட்ரிக் மாடியூலர் கட்டமைப்பு (EMA) தளத்திற்கான ஒரு முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா செயல்படும். இரண்டு நிறுவனங்களும் இந்த தளத்தை அடிப்படையாகக் கொண்ட கார்களை உருவாக்கும், பல்வேறு வகையான EV கார்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படும். மேலும், JLR தனது சனந்த் ஆலையில் இருந்து தனது எலக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் சந்திரசேகரன் கூறுகையில், டாடா மோட்டார்ஸ் மற்றும் JLR ஆகியவை தங்கள் EV கூட்டணி மூலம் பெரிய இலக்குகளை அடையும் திட்டத்தைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டுக்குள் டாடா மோட்டார்ஸுக்கான தங்கள் ஏற்றுமதித் திட்டங்களை குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
டாடா மோட்டார்ஸ், அமெரிக்க ஃபோர்டு மோட்டார்ஸிடமிருந்து பெறப்பட்ட குஜராத் சனந்த் தொழிற்சாலை JLR EMA கார்கள் இந்த முயற்சியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. EMA தளத்தை அடிப்படையாகக் கொண்ட வரவிருக்கும் EV மாடலான அவினியா, இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளுக்கும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் சீனாவில் உற்பத்தி வசதிகளைக் கொண்ட JLR, இந்த தொழிற்சாலைகளை முழுமையாக எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றும் முக்கிய திட்டத்தை வகுத்து வருகிறது. இந்த நிறுவனம் தனது முழு தயாரிப்பு வரிசையையும் 2030 ஆம் ஆண்டுக்குள் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் உற்பத்தி தளமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடைய, JLR தனது உலகளாவிய உற்பத்தி ஆலைகளை மறுசீரமைக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளது.
இந்தியாவில் குஜராத் சனந் தொழிற்சாலைக்கு கூடுதலாக, டாடா மோட்டார்ஸ் மற்றும் JLR ஆகியவை தமிழ்நாட்டில் ஒரு புதிய கூட்டு உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்குகின்றன. இந்த தொழிற்சாலைக்காக சுமார் ரூ.9000 கோடி முதலீடு செய்து, ஏற்றுமதிக்கான தொழிற்சாலையாக அமைக்க உள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனகங்களுக்கான சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகியுள்ளது, சமீபத்தில் விற்பனை குறைந்துள்ளது. இருப்பினும், இது தற்காலிக போக்கு என்றும் சந்தை மீளும் என்றும் சந்திரசேகரன் நம்புகிறார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications