டாடா குழுமம் நீண்ட காலமாக டாடா குடும்பத்தினரால் மட்டுமே நிர்வாக செய்யப்பட்டு வந்தது, ஆனால் பல நெருக்கடிக்கு மத்தியில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் சைரஸ் மிஸ்திரி-க்கு சேர்மன் பதவி கொடுக்கப்பட்டாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பல்வேறு முறன்பாடுகள், நிர்வாக குழுவில் பிரச்சனை என மிகவும் கசப்பான கருத்து வேறுபாடு உடன் சைரஸ் வெளியேற்றப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் ரத்தன் டாடா வயது முதிர்ந்த காரணத்தால் டாடா சன்ஸ் சேர்மன் பதவியை யாருக்க கொடுப்பது என்ற தீவிரமாக ஆலோசனை செய்து, அப்போது டாடா குழுமத்தின் போர் குதிரையாக இருந்த டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன என்.சந்திரசேகரன் புதிய மற்றும் டாடா குடும்பத்தினர் அல்லாத ஒருவராக 2017ல் நியமிக்கப்பட்டார்.

இவருடைய தலைமையில் டாடா குழுமம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் 3வது முறையாக என்.சந்திரசேகரனுக்கு டாடா சன்ஸ் சேர்மன் பதவி காலம் இன்று அளிக்கப்பட்டு உள்ளது.
டாடா டிரஸ்ட்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அனைத்து நிர்வாகிகளும் ஒருமனதான முடிவு செய்து, என்.சந்திரசேகரனை டாடா சன்ஸின் தலைவராக அடுத்த ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, டாடா குழுமத்தின் தலைமை நிர்வாகத்தை தொடர்ந்து வலுப்படுத்தும்.
இந்த முடிவை டாடா டிராஸ்ட் கீழ் இயங்கும் முக்கிய பங்கு நிறுவனங்களான சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்டின் நிர்வாகிகளும் என்.சந்திரசேகரன் பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
என்.சந்திரசேகரன் முதல் முறையாக டாடா சன்ஸ் சேர்மன் ஆக 2017ல் நியமிக்கப்பட்டார், அதை தொடர்ந்து 2022ல் மீண்டும் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக பதவி காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. டாடா டிரஸ்ட் நிர்வாகம் இந்த முடிவை டாடா குழு நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த விவாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சந்திரசேகரனின் தலைமையில் டாடா குழு கடந்த சில ஆண்டுகளில் காட்டிய வளர்ச்சி மற்றும் தலைமைத்துவத்தில் டாடா டிரஸ்ட் நிர்வாகிகள் மிகவும் திருப்தியடைந்துள்ள காரணத்தால் 3வது பதவி காலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என டாடா குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவால்கள்:
இந்த 3வது பதவி காலத்தில் என்.சந்திரசேகரனுக்கு இருக்கும் முக்கியமான சவால்
1. டாடா சன்ஸை பட்டியலிடப்படாத நிறுவனமாக வைத்திருப்பது தான், இதற்கு டாடா டிரஸ்ட்ஸ்-ம் உறுதுணையாக இருப்பதால் நிர்வாக ரீதியில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் செபி, ஆர்பிஐ கொண்டு வந்த சில புதிய விதிமுறைகள் இதற்கு பிரச்சனையாக உள்ளது.
2. டாடா சன்ஸ் நிறுவனத்தின் சிறு முதலீட்டாளராக இருக்கும் Shapoorji Pallonji (SP) குழும் தனது பங்கு இருப்பை விற்பனை செய்துவிட்டு வெளியேற முயற்சித்து வரும் வேளையில், இதற்கான வழியை ஏற்படுத்துவது சந்திரசேகரனின் முன் உள்ள மற்றொரு பணியாக உள்ளது.
டாடா சன்ஸ்-ல் டாடா சன்ஸில் 66% பங்கு வைத்திருக்கும் வேளையில், Shapoorji Pallonji 18.37% பங்கு வைத்துள்ளது. சைரஸ் மிஸ்திரி குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் Shapoorji Pallonji குழுமம் தற்போது பல்வேறு நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், நீண்ட காலமாக கார்ப்ரேட் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இந்த டாடா சன்ஸ் பங்குகளை விற்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications