வறுமையின் பிடியில் வாழ்க்கையைத் தொடங்கி இன்று நாகாலாந்து அரசின் உயர் அதிகாரியாக உயர்ந்துள்ள தமிழர் ஒருவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு இன்று நாடு முழுவதும் நிலவும் பல கூச்சல் குழப்பங்களுக்கும் தீர்வு போல் பதில் கொடுத்துள்ளார். யார் இவர்..? இவரின் டிவிட்டர் பதிவில் என்ன இருந்தது..?
தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பி நெல்லையப்பன் வறுமையின் பிடியில் வாழ்க்கையைத் தொடங்கி இன்று முக்கிய அரசு பதவியில் இருப்பதாகவும், தனது வெற்றிக்குப் பெருமை சேர்த்த மூன்று விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பி நெல்லையப்பன் அவர்கள் இன்று ஒரு தகரக் கூரையுடன் காணப்படும் வீடு, அன்று தென்னை மரம் கீற்றுக் கொண்டு இருந்தது.. இந்த வீட்டில் தான் 30 வயது வரை எனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்த 4 பேர் உடன் வாழ்ந்தோம். தற்போது அரசுப் பணியுடன் பெரிய வீட்டில் வசித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலைக்கு உயர முக்கியமான காரணமாக நெல்லையப்பன் அவர்கள் கூறுவது கல்வி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு தான் எனத் தனது வாழ்வின் வெற்றிக்கான 3 காரணத்தைப் பட்டியலிட்டு டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

யார் இந்தப் பி நெல்லையப்பன்..? தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டு இருந்தாலும், தற்போது நாகாலாந்து முதல்வரின் சிறப்புப் பணியில் இருக்கும் அதிகாரியாக உள்ளார். மேலும் அம்மாநில பள்ளிக் கல்வித் துறையின் துணைத் தலைவராக உள்ளார்.
நெல்லையப்பன் தான் தங்கியிருந்த பூர்வீக வீட்டின் புகைப்படத்தையும், தற்போது தான் தங்கியிருக்கும் வீட்டின் புகைப்படத்தைப் பதிவிட்டு கல்வியும், விடாமுயற்சியும் ஒருவருக்கு என்ன செய்யும் என்பதைக் காட்டியுள்ளார்.
பி நெல்லையப்பன் அவர்களுடைய பதிவு கடந்த 3 நாட்களில் சுமார் 6.5 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இவருடைய பதவிக்கு நிமி வாஷி என்ற ஆராய்ச்சியாளர் எந்தச் செல்வமும் இல்லாத நிலையில், கல்வி என்பது சுதந்திரத்திற்கான உண்மையான வழி எனக் கமெண்ட் செய்தார்.
நிமி வாஷி-யின் டிவிட்டுக்குப் பதில் அளித்த பி நெல்லையப்பன் அவர்கள் சரியாகச் சொன்னீர்கள் மேடம். நான் ஆசிரியராக இருந்தபோது, கல்வி மற்றும் கல்வி சார்ந்த விஷயங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவுகள் சேர்ந்த குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொண்டு, கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு உணர்த்தினேன் எனக் கூறியுள்ளார்.
பொருளாதாரம், சமுகம், செல்வம் அனைத்தையும் கல்வியும், கடின உழைப்பும் வைத்து எவராலும் வெற்றி அடைய முடியும் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளார் பி நெல்லையப்பன் அவர்கள்.
எனது மகன் டாக்டர் ஹிருஷிகேஷ் தனது முதல் மாத ஹவுஸ் சர்ஜன் உதவித்தொகை மூலம் பரிசளித்த ஆடைகளுடன் ஓணம் கொண்டாடப்பட்டது. இன்று அவரால் எங்களுடன் சேர்ந்து ஓணம் பண்டிகையைக் கொண்ட முடியவில்லை எனவும் அந்தப் பதிவில் தெரிவித்தார்.



Click it and Unblock the Notifications