நாகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பது குறிப்பிட்ட நகரங்களோடு நின்றுவிடாமல் மாநிலம் முழுவதும் விரிவடைய வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் தொழில் பூங்காக்கள், நகரங்களில் மினி டைடல் பார்க்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாகை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாகையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் நாகையில் 82.9 கோடி ரூபாய் மதிப்பிலான 26 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனை அடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அப்போது வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளை மையமாக கொண்டு 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை குறிப்பிட்டு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா , டெல்டா மாவட்டங்களில் வாழும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்க மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்காவை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
டெல்டாகாரரான முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொழில் துறை சார்பாகவும் ,டெல்டா மாவட்டங்களின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் டிஆர்பி ராஜா தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார். வேதாரண்யம், தலைஞாயிறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் 480 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் இந்த புதிய சிப்காட் தொழில்பூங்கா அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் செயல்படும் படியான அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தவிர விழுந்தமாவடி ,வானவன்மாதேவி ஆகிய மீனவ கிராமங்களில் 12 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் கோடியக்கரை ஆகிய இடங்களில் பல்நோக்கு பேரிடர் மையம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். அதே போல 150 ஆண்டு கால பழமை வாய்ந்த நாகப்பட்டினம் நகராட்சிக் கட்டிடம் புதுப்பிக்கப்படும், பல்வேறு வடிகால்கள், வாய்க்கால்கள், மதகுகள் 32 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications