பானி பூரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. நம்மூரில் தெருக்கு தெரு இப்போது மாலை நேரத்தில் பானி பூரி கடைகள் இருப்பது தான் ஏராளம். அந்த பானி பூரி கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். பானிபூரிக்கு பல பெயர்கள் உள்ளன: மகாராஷ்டிரா மற்றும் தென்னிந்தியா : பானிபூரி,ஹரியானா : பானி-படாஷி,மத்தியப் பிரதேசம் : ஃபுல்கி,உத்தரப்பிரதேசம் : பானி-கே-பதாஷே/படகே,அசாம் : புஸ்கா/புஸ்கா, மற்றும் பீகார் : ஜல்பூரி/புச்கா ஆகும்.
பானி பூரி காலப்போக்கில் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது. "கோல்கப்பா" என்றும் அழைக்கப்படும் இந்த உணவு, மசாலா கலந்த மசித்த உருளைக்கிழங்கால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய, வெற்று, வறுத்த கோதுமை மற்றும்/அல்லது ரவை ஓடுகளைக் கொண்டுள்ளது. "பானி" என்றும் அழைக்கப்படும் சுவையூட்டப்பட்ட தண்ணீர், உணவின் ஒரு அத்தியாவசிய அங்கமாகும், மேலும் இது பெரும்பாலும் சுவையின் முக்கிய ஆதாரமாகும்.சாட் வட இந்தியப் பகுதியான பீகாரில் தோன்றியது . கோல்கப்பாக்களின் தோற்றம் இந்தியாவைச் சேர்ந்தது. 20 ஆம் நூற்றாண்டில் நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மக்கள் இடம்பெயர்ந்ததன் காரணமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பானிபூரி பரவியது.மார்ச் 10, 2005 அன்று, "பானிபூரி" என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது.

சமீபத்தில், நாக்பூரில் உள்ள ஒரு பானி பூரி விற்பனையாளர் அறிமுகப்படுத்திய தனித்துவமான விளம்பரம் "வாழ்நாள் முழுவதும் பானி பூரி சாப்பிட ஒரு முறை ரூ.99,000 செலுத்தினால் போதும்" என்ற இந்த விற்பனைச் சலுகை சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த அதிரடி சலுகை குறித்து இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ 16,000 க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது. வாடிக்கையாளர்களிடையே இந்த சலுகை குறித்து கலவையான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் "இது விற்பனையாளருக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் பைத்தியம்" என்றும் விமர்சித்தார்கள், மற்றவர்கள் "சில ஆண்டுகளிலேயே இந்த தொகை அமல் படுத்தப்படும்" என்றும் சிந்திக்கின்றனர்.
ஆனால் சிலருக்கு இது ஒரு வித்தியாசமான நவீன யுக்தியாகவும் புதுமையான வணிக நடவடிக்கையாகவும் தெரிகிறது. "பணம் வசூலித்த பின் விற்பனையாளர் தலைமறைவாகிவிடுவாரோ?" என்ற சந்தேகமும் சிலரிடையே தோன்றுகிறது.இந்த வணிக சலுகை பானிபூரியின் பிரபலத்தையும் உணவுத் துறையில் புதிய சிந்தனைகளையும் எடுத்துக்காட்டுகிறது. "வாழ்நாள் முழுவதும் பானி பூரி சாப்பிட இது ஒரு நல்ல ஒப்பந்தமா?" என்ற கேள்வி தற்போது நாக்பூர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பேசப்பட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications