இன்றைய சூழலில் பலரும் யூடியூப் மூலம் நிறைய வருமானம் பெற முடியும் என்று நினைக்கின்றனர். மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை பலரும் தங்கள் வேலையை விட்டு விட்டு யூடியூப் பக்கம் வருகின்றனர். யூடியூப் வருமானம் சிலருக்கு வாழ்வாதாரமாக மாறி இருந்தாலும் இன்னமும் சிலர் யூடியூப் மூலம் வருமானம் பெற சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் ஒரு இளம் பெண் யூடியூபில் தோல்வி அடைந்து விட்டேன். இதனால் என்னுடைய ஸ்டூடியோ உபகரணங்கள் அனைத்தையும் விற்பனை செய்யவுள்ளேன் என்று அதிர்ச்சி அளிக்கும் போஸ்டை பதிவிட்டுள்ளார்.
பல குடும்பங்களுக்கு வருமான ஆதாரமாக இன்று சோசியல் மீடியா பக்கங்கள் மாறி இருக்கின்றன. சிலர் பணிக்கு செல்லாமல் யூட்யூபில் அதிக வருமானம் பெறுகின்றனர். ஆனால் இது எல்லாருக்கும் சாத்தியமா? என்றால் கேள்வி குறித்தான். அப்படித்தான் நளினி உன்னாகர் என்ற பெண்ணும் யூடியூப் சேனலைத் தொடங்கியுள்ளார்.
இவருடைய சேனலில் சமையல் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக நளினி உன்னாகர் தொடர்ந்து யூட்யூப் வீடியோக்களை பதிவிட்டு வந்த நிலையில் இதுவரையில் சுமார் 250 வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

ஆனால் அவர் நினைத்தது போல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தன்னுடைய சேனலில் பகிரப்பட்ட அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டு, இனிமேல் எந்த வித போஸ்டையும் போடப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ஆன்லைன் பிளாட்பார்ம்களில் சாதிக்க அதிர்ஷ்டமும் தேவை.
இதை மட்டுமே முதன்மை வருமானமாக பார்க்க முடியாது என்று பதிவிட்டிருந்தார். அதோடு தன்னுடைய ஸ்டூடியோ உபகரணங்கள் அனைத்தையும் விற்கப் போவதாகவும், விருப்பமுள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தனது X பதிவில் பதிவிட்டுள்ளார்.

யூடியூபின் கருப்பு பக்கம்: அனைவருக்கும் தாங்கள் எதிர்பார்த்தது போல வருமானம் கிடைக்காது என்பதை இந்தப் பதிவு சுட்டிக்காட்டியுள்ளது. பணியில் இருக்கும் சிலர் வருமானம் ஈட்டுவதற்காக யூடியூப் தளத்திற்கு வருகின்றனர் .இது ஒருபுறம் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் போட்டியை மென்மேலும் அதிகரிக்கிறது. ஏனெனில் பலரும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தவும், புகழ், வருமானத்தை ஈட்டவும், யூடியூப் தளங்களை ஒரு வாய்ப்பாக பார்க்கின்றனர்.
இப்படி இருக்கும் பட்சத்தில் யூடியூப் சாதிப்பதற்கு ஒரு கடினமான தளமாக மாற வாய்ப்பு இருக்கிறது. நளினி உன்னகர் போன்ற சில படைப்பாளர்களின் போராட்டம் யூடியூப் தளத்தின் இன்னொரு பக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications