தவெக தலைவர் விஜய் இன்று நாமக்கலில் பிரச்சாரம் செய்த நிலையில் தமிழ்நாடு மக்கள் முழுவதும் நாமக்கல் குறித்து தான் பேசி வருகின்றனர். நாமக்கல் இந்தியாவின் லாரி மற்றும் ரிக் பாடி பில்டிங் வர்த்தகத்திற்கு பெயர்பெற்றது, ஆனால் இத்துறை தற்போது மோசமான நிலையை எட்டியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும். ஒரு காலத்தில் லாரி மற்றும் ரிக் பாடி பில்டிங் வர்த்தகத்தை மட்டுமே நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் இப்போது அவர்களின் நிலை என்ன தெரியுமா..?
தென்னிந்தியாவின் லாரி பாடி கட்டுமானத் தலைநகராக கொண்டாடப்பட்ட நாமக்கல், தற்போது தனது முக்கியத் தொழிலில் கடும் சரிவை சந்தித்து வருகிறது என்பது மிகவும் வறுத்திற்குரிய விஷயம்.

நாமக்கல் மற்றும் அருகிலுள்ள திருச்செங்கோடு பகுதிகளில் தான் லாரி மற்றும் ரிக் பாடி பில்டிங் வர்த்தகம் அதிகம். இத்துறையின் வர்த்தகம் உச்சத்தில் இருக்கும் போது இப்பகுதியில் சிறிதும் பெரியுமாக சுமார் 120 லாரி பாடி பில்டிங் தொழிற்சாலைகள் இருந்தன. இந்த 120 தொழிற்சாலை மூலம் ஒவ்வொரு மாதமும் 1,500 லாரிகள் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் சுமார் 15 வகையான டிரக்குகள், டேங்கர்கள் மற்றும் டிரெய்லர்களை 39 டன் ஏற்றுத் திறன் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவே நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஊக்கியாக இருந்தது.
ஆனால் தற்போது, 1500 லாரிகள் தயாரிக்கப்பட்ட இடத்தில் வெறும் 500 லாரிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. பல சிறிய பட்டறைகள் ஒரு மாதத்துக்கு ஒரு ஆர்டர் மட்டுமே பெறும் வகையில் தான் தற்போதைய நிலை உள்ளது.
இப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று பெரிய நிறுவனங்கள் மட்டுமே அதிகளவிலான வர்த்தகத்தை பெற்று வருகின்றன. மீதமுள்ளவை சிறிய அளவிலான வர்த்தகத்துடன் லாபம் பெறுவதில் போராடி வருகின்றன. புதிய வர்த்தகத்தை பெறுவதற்காக லாபத்தை குறைத்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் பல நிறுவனங்கள் உள்ளது என்பது தான் தற்போதைய நிதர்சனம்
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் லாரி பாடி பில்டிங் வர்த்தகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை பெற்று வந்தனர். ஆனால், தற்போது 30 சதவீதம் ஊழியர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர் என்பது கூடுதலாக வருத்தம் அளிக்கும் செய்தியாக உள்ளது.
20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட திறமையான ஊழியர்கள் இப்போது கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் செல்கின்றனர். அங்கு லாரி பாடி கட்டுமானத் தொழில் வளர்ச்சி காண துவங்கியது இதற்கு முக்கியமான காரணம். இந்த இடம்பெயர்வு நாமக்கல் மாவட்ட பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதோடு இத்துறையில் போட்டியும் அதிகரிக்கும் இதேவேளையில் லாப அளவுகள் குறைவது தான் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது விலைவாசி உயர்வு. கடந்த சில வருடத்தில் லாரி பாடி பில்டிங்-கிற்கு தேவையான ஸ்டீல் மற்றும் பிற மூலப்பொருட்களின் விலை பெரிதும் உயர்ந்துள்ளது, இது உற்பத்தி செலவை அதிகரிக்கிறது.
இதேபோல் மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வாடகை உயர்வு ஆகியை சிறிய தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் போட்டிப்போட முடியாமல் போராடி வருகின்றன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications