2022 இல் ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்ததிலிருந்து, ரஷ்யாவிலிருந்து அதிகக் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது ஒருபக்கம் இருந்தாலும், மேற்கத்திய நாடுகள் அனைத்தும் ரஷ்யா உடன் வர்த்தகம் செய்ய மறுத்த காரணத்தால் பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெற முடியாமல் போனது.
இப்படிக் கடந்த 2 வருடத்தில் பல பிரச்சனைகளை ரஷ்யா எதிர்கொண்டு சமாளித்து வரும் வேளையில் தற்போது ரஷ்யாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. உணவு பொருட்கள் என்பதால் உடனடியாகத் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரஷ்யாவில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டைத் தீர்க்க தமிழ்நாட்டின் நாமக்கல் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.

தற்போது முட்டை ஏற்றுமதி குறித்தும் அதற்கான பேமெண்ட் குறித்தும் ரஷ்யா - இந்தியா மத்தியிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், ரஷ்யாவில் நிலவும் முட்டை தட்டுப்பாட்டை நாமக்கல் மாவட்டம் தீர்க்கும்.
நாமக்கல் மாவட்டத்தை 'முட்டை நகரம்' ஆக அழைக்கப்படும் அளவுக்குக் கறிக்கோழி மற்றும் முட்டை விநியோகத்தில் முன்னோடியாக உள்ளது. இந்திய மக்கள் பயன்படுத்தும் 95 சதவீத முட்டைகள் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்டவை.
இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி தொடர்பாக ரஷ்யாவுடன் ஏற்கனவே பேச்சு வார்த்தை துவங்கிய நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த மாதம் முட்டை விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு தொடர்பாக அந்நாட்டு மக்களிடம் எப்போதும் இல்லாத வகையில் மன்னிப்புக் கேட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
முட்டை விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு பிரச்சனை உருவானதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், இது அரசாங்க பணியின் தோல்வியாகும். எதிர்காலத்தில் நிலைமை சரி செய்யப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன் என விளாடிமிர் புதின் கூறினார்.
ரஷ்யாவில் நிலவும் அதீத பணவீக்கம் மற்றும் மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்ட வர்த்தகம் - பொருளாதாரத் தடைகள் ஆகியவற்றின் மூலம் ரஷ்யாவில் முட்டை நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. கடந்த 12 மாதங்களில் முட்டை விலை 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து ஓமன், இலங்கை, மாலத்தீவு, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முட்டை ஏற்றுமதி செய்யும் டாப் ஐந்து நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் இப்பட்டியலில் ரஷ்யா சேர்வது மட்டும் அல்லாமல் முதல் இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது
முட்டை ஏற்றுமதி தொடர்பான பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் வேளையில் இது வெற்றி அடைந்தால் மாதம் 50 கண்டெய்னர் முட்டை இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகும் என அகில இந்திய பண்ணை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (AIPPEA) செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியா நடப்பு நிதியாண்டில் 9 மாதத்தில் 53.37 மில்லியன் டாலர் மதிப்பிலான முட்டை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் 2023 ஏப்ரல் - அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் ரஷ்யாவுக்கு 110,000 டாலர் மதிப்பிலான முட்டை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
ரஷ்யாவுக்கு ஏற்றுமதி அதிகரித்தால் இந்தியாவில் முட்டை விலை அதிகரிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications