ஸ்டார்ட் அப்கள் தொடர்பான ஷார்க் டேங்க் நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு நமீதா தாபர் குறித்த அறிமுகம் தேவைப்படாது.
தொழிலதிபர், முதலீட்டாளர் என பன்முகம் கொண்டவர் நமீதா தாபர். 600 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு கொண்ட நமீதா தாபர் இந்த உயரத்தை அடைந்தது எப்படி?

நமீதா தாபர்: எம்கியூர் பார்மா (Emcure) நிறுவனத்தின் தலைவர் நமீதா தாபர். சதீஷ் மேத்தா மற்றும் பாவனா மேத்தா தம்பதிக்கு பிறந்த செல்ல மகள். சதீஷ் மேத்தா ஒரு தொழிலதிபர் என்பதால் நமீதா தாபருக்கும் சிறு வயது முதலே தொழிலில் ஆர்வம் இருந்து வந்துள்ளது.
பள்ளி படிப்பை புனேவில் முடித்த அவர் பி.காம் மற்றும் எம்பிஏ படித்தார். பின்னர் அமெரிக்கா சென்ற அவர் மருத்துவ கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பிஸினஸ் ஃபைனான்ஸ் துறைக்கு தலைமை வகித்தார். சிறிது காலம் அங்கே பணியை முடித்துவிட்டு தாயகம் திரும்பினார்.
எம்கியூர் பார்மா நிறுவனம்: நமீதா தாபரின் தந்தை சதீஷ் மேத்தா எம்கியூர் பார்மா என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். தந்தையின் நிறுவனத்தில் இணைந்த நமீதா தாபர், நிறுவனத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டார். நிதித்துறை தலைவராக சேர்ந்த அவர் தற்போது செயலாக்க இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஷார்க் டேங்க் நிகழ்ச்சி மூலம் பிரபலம்: நமீதா தாபர் ஒரு தொழிலதிபராக மட்டுமின்றி கடந்த 3 சீசன்களாக தொழில்முனைவு சம்பந்தப்பட்ட ஷார்க் டேங்க் நிகழ்ச்சியின் நடுவராக செயல்பட்டு வருகிறார்.
இதன் மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளார். கடந்த 2 சீசன்களில் அதிகளவில் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்த நடுவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் 8 லட்சம் ரூபாய் பெறுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.600 கோடிக்கு சொத்து: நமீதா தாபர், தனது ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர். புனேவில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இவர் கட்டியிருக்கும் வீட்டில் இல்லாத வசதிகளே கிடையாது என கூறலாம்.
அதுமட்டுமல்ல விதவிதமான சொகுசு கார்களை பயன்படுத்துவதிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஜிஎல்ஈ, ஆடி கியூ7 என கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு முறை ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் இவர் அணிந்திருந்த ஷூவின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என தகவல் வெளியானது. இவரது சொத்து மதிப்பு 600 கோடி ரூபாய் என தெரிகிறது.
எம்கியூர் நிறுவனம் மட்டுமில்லாது இன்கிரெடிபில் வென்சர்ஸ் லிமிடெட் என்ற கல்வி நிறுவனத்தையும் இவர் வழிநடத்தி வருகிறார். நமீதா தாபர் ஷார்க் டேங்க் நிகழ்ச்சி மூலம் பல்வேறு ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார். 25 நிறுவனங்களில் சுமார் 10 கோடி வரை அவர் முதலீடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Story written by: Devika Manivannan
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications