திருச்சி: இந்தியா முழுவதும் ஆன்லைன் டாக்சி புக்கிங் சேவை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், இத்துறையில் புதிதாக களமிறங்கியுள்ள நம்ம யாத்ரி நிறுவனம் மத்திய அரசின் ONDC தளத்தை அடிப்படையாக கொண்டு ஓலா, உபர் போன்ற டாக்சி சேவையை அளித்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு, சென்னை என நாட்டின் பெருநகரங்களைத் தொடர்ந்து திருச்சியிலும் 'நம்ம யாத்ரி' செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தால், மின் வணிகத்துக்கான உந்துதலை அதிகரிக்கும் வகையில் ஓஎன்டிசி தளத்துடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது நம்ம யாத்ரி. மக்கள் இருந்த இடத்தில் இருந்து ஆட்டோ, கார் புக்கிங் செய்ய பெரு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நிலையில், அரசின் போக்குவரத்துத் துறை நிர்ணயித்துள்ள கட்டணத்தை வசூல் செய்வதை மட்டுமே ஊக்குவிக்கும் வகையில் இந்த செயலி தொடங்கப்பட்டுள்ளது.
பெங்களூருரில் ஒரு நாளுக்கு 1.25 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்து அசத்தியது. தற்போது, திருச்சியில் மே 14ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'நம்ம யாத்ரி' செயலி நிறுவனமும், உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம், சாலைப் போக்குவரத்து தொழிற்சங்கம் ஆகியவை இணைந்து இந்த செயலியை திருச்சியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தன.
இந்த செயலியை பொதுமக்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோ கட்டணமாக கி.மீ. ஒன்றுக்கு ரூ.15, கார் கட்டணமாக கி.மீ. ஒன்றுக்கு ரூ. 21 முதல் என வாகன இருக்கை வசதிகளுக்கு தகுந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நம்ம யாத்ரி நிறுவனத்தின் மேலாளர் சதீஷ், சாலைப் போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சந்திரன், உரிமைக்குரல் ஓட்டுநர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் இந்த செயலியை அறிமுகம் செய்தனர்.
சாப்ட்பேங்க் முதலீட்டில் இயங்கும் Juspay நிறுவனம் Namma Yatri என்ற ஆன்லைன் டாக்சி சேவை தளத்தை மத்திய அரசு உருவாக்கிய Open Network for Digital Commerce (ONDC) தளத்தில் இணைத்து மக்களுக்கு அளித்து வருகிறது. Namma Yatri தளம் ONDC-யில் இணைக்கப்பட்டு இயங்கி வருவதால் கமிஷன், சர்ஜ் சார்ஜ் போன்ற எந்த விஷயமும் இல்லை.
Namma Yatri தளம் நாட்டின் பெருநகரங்களை தாண்டி சிறு நகரங்களையும் அடைய துவங்கியுள்ளதால், மக்கள் குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் டாக்சி சேவையை பயன்படுத்த முடியும். மத்திய அரசின் ONDC தளத்தின் அறிமுகம் மிகவும் பாராட்டுக்குறியது, தற்போது பல நிறுவனங்கள் இதில் இணைந்து வரும் வேளையில் மிகப்பெரிய விரிவாக்கம் அடைய வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications