பெங்களூரு: இந்தியாவில் ஓலா, உபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்கள் செயலி வாயிலாக வாடகை ஆட்டோ மற்றும் கார் சேவைகளை வழங்குகின்றன. இவர்களுக்கு எல்லாம் போட்டியாக உருவாகி வருகிறது நம்ம யாத்ரி நிறுவனம்.
நம்ம யாத்ரி நிறுவனம் முதல் கட்ட நிதி திரட்டலில் ஈடுபட்டு கூகுள் உள்ளிட்ட முதன்மையான நிறுவனங்களிடம் இருந்து கணிசமான தொகையை திரட்டியுள்ளது. முதல் கட்ட நிதி திரட்டலில் தங்களுக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(92 கோடி ரூபாய்) கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

நம்ம யாத்ரியின் தாய் நிறுவனமான மூவிங் டெக் இந்த நிதி ஆய்வு மற்றும் ஓட்டுநர்களுக்கான வருமானம் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
தற்போது நம்ம யாத்ரி ஓஎன்டிசி எனப்படும் ஓபன் நெட்வொர்க் ஃபார் டிஜிட்டல் காமர்ஸ் மூலம் செயல்படுகிறது. மத்திய அரசின் ஆதரவு பெற்றுள்ள நம்ம யாத்ரி பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் மிகவும் புகழ்பெற்று வருகிறது. ஓலா ,உபர் நிறுவனங்களைப் போல ஓட்டுநர்களிடம் இது கமிஷன் பெறுவதில்லை. எனவே ஆட்டோ ஓட்டுநர்களும் கார் ஓட்டுநர்களும் நம்ம யாத்ரியில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.

முதல் கட்ட நிதி திரட்டலில் கூகுள், ப்ளூ வென்சர்ஸ்(Blume Ventures )மற்றும் ஆண்டிலர்( Antler) ஆகிய நிறுவனங்கள் முதன்மையாக முதலீடு செய்துள்ளன. மேற்கொண்டு தங்கள் சேவைகளை பல்வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்த இந்த நிதியானது பயன்படுத்தப்படும் என நம்ம யாத்ரி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மகிழன் செல்வம் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பொது போக்குவரத்து நிறுவனங்களான மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகளுடன் இணைந்து நம்ம யாத்ரியை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அதற்காக இந்த நிதியானது பயன்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்.
நம்ம யாத்ரி நிறுவனம் ஏற்கனவே சென்னை மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் நிறுவனங்களுடன் இணைந்து வாடகை சேவையை வழங்கி வருகிறது. கூடுதலாக மூன்று நகரங்களில் மெட்ரோ ரயில் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் எட்டு நகரங்களில் வாடகை கார் மற்றும் ஆட்டோ சேவையை வழங்கி வருகிறது. ஒரு மாதத்திற்கு 40 முதல் 45 லட்சம் ரைடுகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கிறது.
இந்த நிறுவனத்தில் 25 சதவீத பயணங்கள் கார்கள் மூலமும், 75 சதவீத பயணங்கள் ஆட்டோக்கள் மூலமும் பதிவு செய்யப்படுகிறது. ஜஸ்பே என்ற பேமெண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக தொடங்கப்பட்டது தான் நம்ம யாத்ரி. இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் தனி நிறுவனமாக பிரிந்து மூவிங் டெக் என்ற பெயரின் கீழ் நம்ம யாத்ரியை இயக்கி வருகிறது.
வழக்கமாக ஓலா, உபர் நிறுவனங்கள் தங்களுடன் இணைந்துள்ள கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் 20 முதல் 35 சதவீதம் வரை ஒவ்வொரு ரைடுக்கும் கமிஷன் பெறுகிறது. ஆனால் நம்ம யாத்ரியில் இத்தகைய கமிஷன் கிடையாது. ஓட்டுநர்கள் மாதந்தோறும் சந்தா கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
Story written by: Devika
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications