பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களே.. உஷார்.. Infosys நந்தன் நிலேகனி வார்னிங்!

இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்குவதிலும், வேலைவாய்ப்பு எண்ணிக்கையிலும் பெரும் மாற்றம் நடக்கப்போவதாக இன்போசிஸ் நிறுவனர் மற்றும் சேர்மனுமான நந்தன் நிலேகனி முக்கியமான வார்னிங் கொடுத்துள்ளார்.

கடந்த 100 வருடத்தில் தொழில்நுட்பம் எவ்வளவோ மாறியிருந்தாலும், கடந்த 5 வருடத்தில் இந்த மாற்றத்தின் வேகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகரித்துள்ளது என்பது தன் உண்மை. உதாரணமாக ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் அதை ஏற்றுக்கொள்வதற்கு சில காலம் ஆகும், ஆனால் தற்போது இந்த கால நிலை உடைந்துள்ளது. இதனால் இந்தியா மட்டுமல்ல உலகளவில் வேலைவாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் உருவாகி வருகிறது.

பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களே.. உஷார்.. Infosys நந்தன் நிலேகனி வார்னிங்!

இந்த நிலையில் இன்போசிஸ் நந்தன் நிலேகனி NCAER நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய போது முக்கியமான வார்னிங் கொடுத்தார். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

இதனால் வேலை செய்யும் முறை தலைகீழாக மாறியுள்ளது, இதன் எதிரொலியாக பெரிய நிறுவனங்கள் வரும் காலத்தில் அதிகளவிலான ஊழியர்களை குறைக்க வழிவகுக்கும்.

இதேவேளையில் நாடு முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான சிறு நிறுவனங்கள் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதனால் நாட்டின் Job Creation துறையில் மாபெரும் மாற்றத்தை இந்தியா சந்திக்க உள்ளதாக NCAER கூட்டத்தில் பேசியபோது நந்தன் நீலகேனி தெரிவித்தார்.

பொதுவாக பெரிய நிறுவனங்களில் திட்டமிட்ட பணிகளை மட்டுமே செய்ய அதிகளவிலான ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள், ஆனால் சிறிய நிறுவனத்தில் ஒவ்வொரு ஊழியரும் பல வேலைகளை செய்ய வேண்டியது இருக்கும்.

ஓரே வேளையை ஒரு ஊழியர் செய்யும் பட்சத்தில் அந்த வேலையை எளிதாக செயற்கை நுண்ணறிவு மூலம் ஆட்டோமேஷன் செய்ய முடியும், இதனாலேயே இந்த மாற்றத்தில் பெரிய நிறுவனங்கள் அதிகமாக பாதிக்கப்படும். இதேபோல் பெரிய நிறுவனங்கள் தற்போது செலவின குறைப்பில் தீவிரமாக இருக்கும் காரணத்தாலும் இத்தகைய நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து குறையும் என சந்தை வல்லுனர்கள் விளக்குகின்றனர்.

இதனால் இனி வரும் காலத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அரசும், மக்களும் பெரிய நிறுவனங்களை சார்ந்து இருக்க தேவையில்லை. இனி இந்தியாவின் வேலைவாய்ப்பு இன்ஜின் சிறிய நிறுவனங்களுக்கும், சிறு தொழிலதிபர்களும் தான். இதனால் கொள்கை அளவிலும் சிறிய நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+