நந்தினி எடுத்த முடிவு.. தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா.. விஜய் அரசின் முடிவு என்ன..?

இந்திய மக்களின் முக்கிய நுகர்வு பொருளான நெய், வெண்ணெய் விலை உயர்த்தப்பட உள்ளதாக நந்தினி பிராண்டை நிர்வாகம் செய்யும் KMF அமைப்பின் கீழ் இயங்கும் பெங்களூர் கூட்டுறவு பால் சங்கம் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

இந்த புதிய விலை உயர்வு வெள்ளிக்கிழமை முதல் நெய், வெண்ணெய்-யின் பாக்கெட் சைஸ்க்கு ஏற்றார் போல் விலை மாறுப்படும் என அறிவித்துள்ளது. இப்புதிய விலை நிலைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரையில் தொடரும் எனவும் தெரிவித்திருந்தது.

நந்தினி எடுத்த முடிவு.. தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா.. விஜய் அரசின் முடிவு என்ன..?

இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநில அளவிலான பால் பொருட்கள் நிர்வாக அமைப்பான கர்நாடக பால் அமைப்பு (KMF) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வெள்ளிக்கிழமை முதல் ஒரு லிட்டர் நந்தினி நெய் 15 ரூபாயும், ஒரு கிலோ வெண்ணெய் 50 ரூபாயும் உயர உள்ளதாக அறிவித்துள்ளது. இப்புதிய விலை இன்று வெளியாகும் அனைத்து பாக்கெட்களும் அச்சிடப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது.

இதன் மூலம் ஒரு லிட்டர் நந்தினி நெய் தற்போது 715 ரூபாய்க்கும், நந்தினி வெண்ணெய் 660 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடைசியாக கர்நாடக பால் அமைப்பு (KMF) 2025 நவம்பர் மாதம் நெய் விலையை 90 ரூபாயும், வெண்ணெய் விலையை 26 ரூபாயும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

நந்தினி பிராண்டின் நெய், வெண்ணெய்-க்கு சந்தையில் டிமாண்ட் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தாலும், வர்த்தக சந்தை, உற்பத்தி செலவுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த விலை உயர்வு அமலாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போதைய விலை உயர்வுக்கு பின்பும் சந்தையில் பெரும்பாலான பிராண்டுகளின் நெய், வெண்ணெய்-யின் விலையை காட்டிலும் குறைவாகவே உள்ளது.சந்தை நிலைக்கு ஏற்ப விலை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது பொருளாதார ரீதியாக அவசியம் என KMF அமைப்பின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கர்நாடக உணவில் நெய், வெண்ணெய் முக்கிய பங்காற்றும் வேளையில், இனி ஹோட்டல்களில் உணவு விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது விலை உயர்வை பார்க்கும் வெறும் 3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதால் விலை உயர்வு இருக்க வாய்ப்பில்லை என பெங்களூர் ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டெக்கான் ஹெரால்டுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு எப்படி ஆவின் பிராண்டை நிர்வாகம் செய்கிறதோ, அதேபோலவே KMF இயங்குகிறது. இத்தகைய நிலையில் தமிழ்நாட்டிலும் பால், தயிர், நெய், வெண்ணெய் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆவின் நெய் 1 லிட்டர் 690 ரூராய்க்கு விற்கப்படுகிறது, வெண்ணெய் ஒரு கிலோ 550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+