திருப்பதி லட்டு: பிரச்சனைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த TTD.. நெய் சப்ளையை தொடர்ந்த நந்தினி பிராண்ட்!

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் நெய் பயன்படுத்தப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பதியில் வழங்கப்படும் லட்டுக்களின் அசல் தரத்தை மீட்டெடுக்கும் வகையில் புதிய நெய் சப்ளையராக, கர்நாடகா மில்க் ஃபெடரேஷனை (KMF) மீண்டும் அணுகியுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அங்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து தற்போது திருப்பதி தேவஸ்தானம் அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 திருப்பதி லட்டு: பிரச்சனைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்த TTD.. நெய் சப்ளையை தொடர்ந்த நந்தினி பிராண்ட்!


லட்டுகளின் தரம் மற்றும் அவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் ஆகியவற்றில் இனி எந்த சமரசமும் இருக்காது" என்று TTD நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையில் திருப்பதி லட்டு தயாரிக்க 3,000 டன் KMF-இன் நந்தினி நெய் பயன்படுத்தப்பட்டது. 2019-ஆம் ஆண்டிலும் 1,700 டன்களை வழங்கிய கர்நாடக பால் கூட்டமைப்புக்கு (KMF), சமீபத்திய ஆண்டுகளில் நெய் விநியோகத்திற்கான ஏலத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நெய் வாங்குவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடுகிறது. விலங்குகளின் கொழுப்பில் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து மீண்டும் தற்போது நெய் சப்ளையராக KMF நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக மீண்டும் நெய் வழங்கத் தொடங்கியுள்ளது.

"கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பதி லட்டுகளுக்கு நெய் சப்ளையை மீண்டும் தொடங்கினோம். அடுத்த 3 மாதங்களில் 350 டன் நெய் வழங்க ஆர்டர் கிடைத்துள்ளது. தற்போதைய விநியோக ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மீண்டும் நந்தினி நெய்யை வாங்க ஆர்வமாக இருப்பதாகவும் எங்களிடம் தெரிவித்தனர். எங்கள் நந்தினி நெய் திருப்பதி லட்டுவுடன் தொடர்புடையதாக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்" என்று KMF தலைவர் பீமா நாயக் கூறியுள்ளார்.

2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்திற்கு, நெய் சப்ளைக்காக கோவில் அதிகாரிகளால் நடத்தப்பட்ட போட்டி ஏலத்தில் KMF வெற்றிபெறவில்லை. தற்போது மீண்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்குவதற்கான டெண்டர் கிடைத்துள்ளது.

“எங்களிடம் போதுமான நெய் இருப்பு உள்ளது, திருப்பதிக்கு தேவையான அளவு நெய் வழங்க தயாராக உள்ளோம். KMF ஏற்கனவே குக்கே சுப்ரமண்யா, தர்மஸ்தலா, கொல்லூர், கடேல் போன்ற பெரிய கோவில்களுக்கு நெய்யை வழங்கி வருகிறது. நந்தினி நெய்யை ஊக்குவித்ததற்காக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த திரு. நாயக், நந்தினி நெய்யை கோவில்களுக்கு வாங்குவதற்கான அரசாணை KMF-க்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+