கர்நாடகாவில் நந்தினி பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, இது வரும் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு நந்தினி பால் விலையை உயர்த்துவதற்கு அனுமதி அளித்துள்ளது . இதன்படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து கர்நாடகாவில் நந்தினி பால் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் விலை உயர்த்தி விற்கப்படும் என மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. என். ராஜன்னா தெரிவித்துள்ளார். மேலும் நந்தினி தயிரின் விலையும் ஒரு கிலோவிற்கு 4 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

கர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பால் கொள்முதல் கூட்டமைப்பினரின் தொடர் கோரிக்கையை ஏற்று அரசு நந்தினி பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி இருப்பதாக அவர் விளக்கம் தந்துள்ளார். கர்நாடக பால் கூட்டுறவு சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் ஒரு லிட்டருக்கு 5 ரூபாய் வரை பாலின் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன் வைத்தார்களாம். ஆனால் அரசு அதை முழுமையாக ஏற்காமல் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் என உயர்த்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் தான் நந்தினி பால் விலை ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் என உயர்த்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு பாக்கெட்டிலும் கூடுதலாக 50 மில்லி பால் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்குள்ளாகவே இரண்டாவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கான செலவினங்கள் அதிகரித்ததால் நந்தினி பால் விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக கர்நாடக அரசு அமைச்சரவையை கூட்டி ஆலோசனையை நடத்தி ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் வரை விலை உயர்த்துவது என முடிவு செய்ததாகவும் கர்நாடக மாநில அமைச்சர் கே வெங்கடேஷ் விளக்கம் தந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கர்நாடகாவில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் கூட்டுறவு சங்கத்தினர் பாலின் விலையை உயர்த்த வேண்டும் என தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கர்நாடக ராஜ்ய ரைதா சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு 50 ரூபாயாக உயர்த்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்த குறைந்தபட்ச ஆதார விலையை நடைமுறைக்கு கொண்டு வரும் வரை இடைக்கால நிவாரணமாக லிட்டருக்கு 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
வரும் 1ஆம் தேதி முதல் கர்நாடகாவில் ஒரு லிட்டர் நந்தினி பால் விலை ப்ளூ பாக்கெட் 44 ரூபாயிலிருந்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. நந்தினி பால் விலை உயர்வுக்கு பால் உற்பத்தியாளர்களும் ,கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஒரே ஆண்டில் இரண்டு முறை விலை உயர்வு ஏன் என கேள்வி எழுப்பும் மக்கள் அரசு நிதி சுமையை ஏற்படுத்துவதாக சாடியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications