IPL 2025ன் சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) 2026 சீசனுக்கு முன் விற்பனை செய்ய அந்த அணியின் உரிமையாளரான டியாஜியோ நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்த அணியை வாங்க பெங்களூரின் முக்கிய பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களான நிகில் காமத், ரஞ்சன் பாய் ஆகியோரும், சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவல்லா போன்றவர்கள் முயற்சி செய்தவதாத தகவல் வெளியானது.
டியாஜியோ நிறுவனம் RCB அணி முதல் முறையாக 2025ல் வெற்றி கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்த வெற்றியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில் அணியின் பெரும் பகுதி பங்குகளை விற்கும் முடிவு 2026 சீசன் முன்பே எடுத்தது. கிட்டத்தட்ட இதை திட்டத்தில் தான் நாட்டின் 2 பெரிய டெய்ரி நிறுவனங்களும் எடுத்துள்ளது.

கர்நாடக பால் கூட்டமைப்பு (KMF) தனது நந்தினி பிராண்டை RCB அணியின் IPL 2026க்கு ஸ்பான்சராக இணைக்க ஆர்வம் காட்டுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால் நந்தினி பிராண்ட் அதிகாரப்பூர்வ டெய்ரி பார்னராக மாறலாம். KMF அமைப்பு இந்த பேச்சுவார்த்தையில் இருக்கும் இதேவேளையில், இதனை செயல்படுத்த ஏஜென்சியாக இயங்க விருப்பம் உள்ள நிறுவனங்களை அழைக்க டெண்டரை வெளியிட்டுள்ளது.
IPL, BCCI விதிகளுக்கு இணங்க நிறுவனங்கள் உரிமை பெற உதவும் ஏஜென்சிகளை இந்த டென்டர் மூலம் தேர்வு செய்யும். கடந்த ஆண்டு அமுல் RCB ஸ்பான்சராக இருந்தது, இப்போது நந்தினி அதை மாற்றலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமுல் - நந்தினி போட்டி
அமுல் கடந்த ஆண்டு 9 IPL அணிகளை ஸ்பான்சர் செய்தது. அமுல் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, இந்த சீசனுக்கான அணிகளை விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.
கர்நாடகாவில் அமுல் - நந்தின் மத்தியில் எப்போதும் சலசலப்பு இருக்கும். சமீபத்தில் பெங்களூரு மெட்ரோ நிலையங்களில் அமுல் கியோஸ்க் அமைத்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் செய்தது. இதன் பின்பு அமுல்-க்கு போட்டியாக 8 இடத்தில் கியோஸ்க் அமைப்பதாக அறிவிப்பு வெளியானது.
அமுல் பெங்களூரு சந்தையில் புதிய பால் பொருட்களை அறிமுகப்படுத்தியது 2023 சட்டமன்ற தேர்தலுக்கு முன் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் ஸ்பான்சர்ஷிப் பெறுவதிலும் அமுல் - நந்தினி போட்டி மத்தியில் போட்டி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications