மும்பை: இந்தியாவின் புகழ்பெற்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மிந்த்ரா தவிர்க்க முடியாத ஒன்று. இதன் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவர் இதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படக் கூடிய நந்திதா சின்ஹா. வெற்றி என்பது அத்தனை எளிதாக கிடைத்துவிடாது அதற்கு விடா முயற்சி அவசியம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இவர்.
பிளிப்கார்ட் தளத்திற்கு சொந்தமான பேஷன் ஈ-காமர்ஸ் செயலி மிந்த்ரா. இதன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படும் நந்திதா சின்ஹா, லக்னோவில் பிறந்தவர். ஐஐடியில் செராமிக் பொறியியல் படிப்பதாக இவர் கூறிய போது பெற்றோர் இவரை ஆச்சர்யமாக பார்த்துள்ளனர். ஆனால் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே ரிஸ்குகளை எடுக்க வைத்ததாக கூறுகிறார் நந்திதா. படிப்பை முடித்து 2004ஆம் ஆண்டு யுனிலிவரில் டிரெய்னி மேனேஜராக பணிக்கு சேர்ந்தார்.

யுனிலிவரில் மார்க்கெட்டிங் துறையில் இருந்த சவால்களை கற்றுக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார். தினமும் கடை கடையாக ஏறி இறங்கி சந்தை நிலவரங்களை தெரிந்து கொண்டது தற்போது வரை தனக்கு உதவுவதாக கூறுகிறார். பின்னர் பிரிட்டானியா நிறுவனத்தில் பணி வாய்ப்பு கிடைக்க அங்கேயும் இவருக்கு மார்க்கெட்டிங் சார்ந்த அனுபவங்கள் கிடைத்துள்ளன.
பின்னர் நண்பர்களோடு இணைந்து குழந்தைகளுக்கான மைபேபிகார்ட் என்ற ஈ காமர்ஸ் தளத்தை தொடங்கினார். பின்னர் 2013இல் பிளிப்கார்ட்டில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இதனை தவறவிடாமல் எட்டி பிடித்து கொண்டார்.
இங்கே மருத்துவம் மற்றும் அழகு சார்ந்த பொருட்கள் துறையில் இணை இயக்குனராக 8 ஆண்டுகள் பணி செய்தார். அங்கே தலைமை செயல் அதிகாரியாக இருந்த கிருஷ்ணமூர்த்தி, சிஎஃப்ஓ பணியில் இருந்த வெங்கட்ராமன், எஸ்விபி-ஆக இருந்த ஜா ஆகிய மூவர் தன்னை வழிநடத்தி பல விஷயங்களை கற்று தந்ததாக கூறுகிறார் நந்திதா சின்ஹா.
2022ஆம் ஆண்டு இவருக்கு மிந்த்ராவை தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதாவது 2022 ஜனவரியில் இவர் மிந்த்ராவின் தலைமை செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். 2021இல் மிந்த்ராவில் 280 இண்டர்நேஷ்னல் பிராண்டுகளே இருந்தன, தற்போது அது 420ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே அழகு சாதன துறையில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டாக மிந்த்ரா மாறியுள்ளது.
அச்சப்படக் கூடாது, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும், அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் இது தான் என்னுடைய வெற்றி மந்திரம் என கூறுகிறார் நந்திதா சின்ஹா. வாழ்க்கையில் சில வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கும், அதனை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்பவர்களே வெற்றியாளர்கள் என கூறுகிறார் நந்திதா.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications