இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ்-ன் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களையும் வாரத்திற்கு 70 மணி நேர வேலை செய்ய வேண்டும் என பேசியது இப்போது வரையில் டிரெண்டிங் ஆக உள்ளது. குறிப்பாக சில நாட்களுக்கு முன் எல் அண்டு டி தலைவர் வாரத்திற்கு 90 மணிநேரம், ஞாயிற்றுக்கிழமையும் பணியாற்ற வேண்டும் என கூறிய பின்பு மீண்டும் நாராயண மூர்த்தி-யின் 70 மணிநேரம் பேச்சு வைரலானது.
இந்த நிலையில் நாராயண மூர்த்தி தனது கருத்து குறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். எந்தொரு நிறுவனமும் தங்களது ஊழியர்கள் மீது இத்தகைய 70 மணிநேர பணி நேரத்தை திணிக்க முடியாது என்று அவர் தெளிவுபடுத்தினார். IMC இன் கிலாசந்த் நினைவு சொற்பொழிவில் பேசிய அவர், தனது நிலைப்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.

"நீங்கள் இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது" என்று திட்டவட்டமாக நாராயண மூர்த்தி கூறினார். இதை தொடர்ந்து அவர் பேசுகையில், இன்ஃபோசிஸை உருவாக்கும் ஆரம்ப ஆண்டுகளில் தனது சொந்த அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
"நான் காலை 6:20 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று இரவு 8:30 மணிக்கு வெளியேறுவேன். நான் அதை 40 வருடங்களாக செய்திருக்கிறேன். இது உண்மை, எனவே யாரும் இதை தவறு என்று சொல்ல முடியாது." என தனது சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
நாராயண மூர்த்தி கடைசியாக வேலை நேரத்தைப் பற்றிய முடிவுகள் மிகவும் தனிப்பட்டவை மற்றும் பொது விவாதத்திற்கு ஏற்றவை அல்ல என்றும் தெரிவித்து, தனது 70 மணிநேர பணியின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் முக்கியத்துவம் அடிப்படையில் வொர்க் லைப் பேலன்ஸ்-ஐ தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதேபோன்ற கருத்தை தான் சமீபத்தில் மற்றொரு பெரும்புள்ளி தெரிவித்தார்.
இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான கௌதம் அதானி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் வொர்க் - லைப் பேலன்ஸ் குறித்த தனது பார்வையைப் பகிர்ந்து கொண்டார்.
இதில் பேசிய கௌதம் அதானி "உங்கள் வொர்க் - லைப் பேலன்ஸ் பற்றிய கருத்து என் மீது திணிக்கப்படக்கூடாது, இதேபோல் எனது வொர்க் - லைப் பேலன்ஸ் நிலையை உங்கள் மீது நான் திணிக்கக்கூடாது." வொர்க் - லைப் பேலன்ஸ் என்பது நபருக்கு நபர் மாறுபடும் என தெரிவித்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications