ஒவ்வொரு பெரிய மனிதருக்கும் தனது இளமைக்காலத்தில் சில ரணங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும். பின்நாட்களில் அதை அசைபோடும்போது அந்த வலி அவர்களை வெளிப்படையாக மனம் விட்டுப் பேச வைத்து விடுகிறது.
அன்றைக்கு விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி அப்படியொரு முடிவை எடுத்திருக்காவிட்டால் இன்றைக்கு இன்போசிஸ் என்ற நிறுவனம் இருந்திருக்குமா என்பது கூட சந்தேகம்தான்!

ஆமாம். அன்றைக்கு வேலைக்கு ஆள் எடுப்பதில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி செய்த தவறு இன்றைக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றியிருக்கக் கூடும். தனது வேலை விண்ணப்பத்தை விப்ரோ நிறுவனம் நிராகரித்ததைத் தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார் நாராயண மூர்த்தி.
சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் இன்போசிஸ் நாரணயமூர்த்தி, தான் விப்ரோ நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்த நிலையில், இது நிராகரிக்கப்பட்டது என தெரிவித்தார். பின்னாளில் தன்னிடம் அசிம் பிரேம்ஜி தன்னை தேர்வு செய்யாதது தன் வாழ்வில் பெரும் தவறு என கூறியதாகவும் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
இன்றைக்கு ஐடி துறையில் விப்ரோவுடன் இன்போசிஸ் ஒரு போட்டி நிறுவனமாக மோதிக் கொண்டிருக்கிறது. நாராயண மூர்த்தியிடம் பிரேம்ஜி ஒரு முறை கூறினாராம், உங்களை வேலைக்கு எடுக்காததுதான் நான் செய்தவற்றிலேயே மிகப் பெரிய தவறு என்று.
ஜனவரி 12 ஆம் தேதிப்படி இன்போசிஸ் நிகர மதிப்பு ரூ.6.62 லட்சம் கோடியாகும். விப்ரோவின் நிகர மதிப்பு ரூ.2.43 லட்சம் கோடி.
ஐஐஎம் ஆமதாபாத்தில் ரிசர்ச் அசோசியேட்டாக முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தார் நாராயண மூர்த்தி. அங்கு அவர் தலைமை சிஸ்டம்ஸ் புரோகிராமராக பணியாற்றினார்.
எலக்ட்ரானிக் கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்துக்காக BASIC மொழி இன்டர்பிரட்டர் உருவாக்கத்தில் நாராயண மூர்த்தி அங்கு ஈடுபட்டிருந்தார். இன்போசிஸ் தொடங்குவதற்கு முன்பாக சாப்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி தோல்வியில் முடிந்தது.அதன் பின்னர் அவர் புனேயில் உள்ள பத்னி கம்யூட்டர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
வாரத்துக்கு 70 மணிநேரம் இன்றைய இளைஞர்கள் வேலை பார்க்க வேண்டும் என்றும் அதன் மூலம் நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என்றும் கூறியதால் நாராயண மூர்த்தி பல விவாதங்களை கிளப்பியுள்ளார்.
இளம் தலைமுறையினரில் பலருக்கு இதில் ஏற்பு இல்லை. ஆனால் நாராயண மூர்த்தி தனது இளமைக்காலத்தில் 70 மணிநேரம் வேலை பார்த்ததாகவும் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைத்ததாகவும் கூறினார்.
இந்தியாவில் வறுமையில் வாடுபவர்களின் மேம்பாட்டுக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. அந்தப் பொறுப்பு இன்றைய இளைஞர்களுக்கு உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படிக் கூறுவதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. வாரத்துக்கு 70 மணிநேர வேலை என்பது ஒரு மரபாக வேண்டும் என்று நாராயண மூர்த்தி கூறினார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications