இன்போசிஸ் நாராயண மூர்த்தி ஐடி ஊழியர்களைத் தற்போது அதிகளவில் பயமுறுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் குறித்தும், சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா-வின் வீடியோ மற்றும் போட்டோ இணையத்தில் வைரலாகி ஒட்டுமொத்த பாலிவுட்டின் பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட Deepfake தொழில்நுட்பம் குறித்தும் பேசியுள்ளார்.
இந்திய தொழில்நுட்ப பயணத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் மூலம் மொத்தத்தையும் மாற்றிய அதன் நிறுவனர் நாராயண மூர்த்திச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ஆனால் மனித திறன்களை ஒப்பிடுகையில் AI அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தின் அற்புதமாகவே பார்க்கப்படுகிறது என ஒரு பேட்டியில் பேசியுள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வங்கி சேவையில் இருந்து மருத்துவச் சேவைகள் வரையில் வந்திருக்கும் வேளையில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திப் பேச்சு மிகவும் முக்கியமானதாகவே உள்ளது. காரணம் தொழில்நுட்ப வளர்ச்சி மாற்றத்தை இவரை விடவும் யாரும் அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் தான்.
இதோடு இப்பேட்டியில் நாராயண மூர்த்திச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஐடி சேவை துறைக்குக் கணிசமான பாதிப்பு இருப்பதை ஒப்புக்கொண்டார், குறிப்பாகத் தவறான காரியங்களுக்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் போது ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் நாராயண மூர்த்தி அவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்யும் போது மனிதர்களின் மூளை எவ்வளவு நெகிழ்வுத்தன்மை கொண்ட கருவியாக இருப்பது புரிகிறது என இப்பேட்டியில் கூறினார்.
மேலும் நாராயண மூர்த்தி அவர்கள் சாட்ஜிபிடி-4 முதல் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் அல்காரிதமிக் திங்கிங் குறித்துப் பாராட்டியது மட்டும் அல்லாமல் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பத்திற்கு டேட்டா தான் அடிப்படை, இதை மனிதர்கள் உள்ளிட வேண்டும் எனவும் கூறினார். இதோடு செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களுக்கு உதவும் ஒரு கருவி மட்டுமே, இதை மனிதர்களை ஒருபோதும் ரீப்ளேஸ் செய்ய முடியாது.

உதாரணமாக ஆட்டோமேட்டி டிரைவிங், துல்லியமான அறுவை சிகிச்சை போன்றவற்றுக்குச் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் பலன் அளிக்கும் எனவும் கூறினார். இதைத் தொடர்ந்து இப்பேட்டியில் நாராயண மூர்த்தி அவர்கள் DeepFakes குறித்தும் பேசினார்.
DeepFakes ஒரு பிரச்சனைக்குரிய தொழில்நுட்பம் தான், ஆனால் எந்தொரு தொழில்நுட்பமும் தவறான எண்ணம் கொண்டவர்கள் கையில் சென்றாலும் இது ஆபத்து தான், இது எப்போதும் இருக்கும் பிரச்சனை எனவும் இன்போசிஸ் நாராயண மூர்த்திப் பேசினார்.
DeepFakes அல்லது AI ஆபத்து சார்ந்த பிரச்சனைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது என உலகம் முழுவதும் ஆலோசனை நடந்து வருகிறது. மேலும் இதில் நிறையப் புத்திசாலி தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று நான் நம்புகிறேன். எனவே நான் DeepFakes, AI பற்றி நெகட்டிவாக இருப்பதை விட மிகவும் பாசிட்டிவாக இருக்கிறேன் என்று உறுதியாகக் கூறினார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications