இன்ஃபோசிஸ் நிறுவனர் என்ஆர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் கடந்த வாரம் தங்கள் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோர் ஆண் குழந்தையைப் பிறந்தது மூலம் மீண்டும் தாத்தா பாட்டியானார்கள்.
அக்ஷதா மூர்த்தி - ரிஷி சுனக் ஆகியோருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு முறை தாத்தா பாட்டியான நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்திக்கு தற்போது மூன்றாவது பேரக்குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் ஆகியோருக்கு நவம்பர் 10-ம் தேதி பெங்களூரில் குழந்தை பிறந்ததாகவும், குழந்தைக்கு ஏகாக்ரா (Ekagrah) என்று பெயரிடப்பட்டுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. Ekagrah என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், அதாவது அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதிப்பாடு என்பது இதற்கான பொருள்.
மகாபாரதத்தில் அர்ஜுனனின் ஏகாக்ரா ஈர்க்கப்பட்டதாக ரோஹன் மூர்த்தி மற்றும் அபர்ணா கிருஷ்ணன் இந்தப் பெயரை வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பெயர் பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்திலும் உள்ளது, இந்த அத்தியாயம் சுய-உணர்தலுக்கான வழிமுறையாக யோகா மற்றும் தியானத்தைக் கவனம் செலுத்துகிறது.
ரோஹன் மூர்த்தி முதல் மனைவியான லட்சுமி வேணு-வை 2011ல் திருமணம் செய்துகொண்டு 2015ல் விவாகரத்து செய்த பின்பு, ரோஹன் மூர்த்தி அபர்ணா கிருஷ்ணன்-ஐ 2019 இல் திருமணம் செய்து கொண்டார். பெங்களூரில் நடந்த திருமணத்தில் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்கள் நந்தன் நிலேகனி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன், எஸ்டி ஷிபுலால் மற்றும் கே தினேஷ் மற்றும் பயோகான் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா உட்பட இரு குடும்பங்களின் நெருங்கிய குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்து கொண்டனர்.
ரோஹன் மூர்த்தி இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயணமூர்த்திச் சிஇஓ-வாக இருந்த போது அவருடன் இணைந்து பணியாற்றினார், ரோஹன் மூர்த்தி-ஐ சிஇஓ ஆக்கவும் முயற்சிகள் நடந்தது. ஆனால் ரோஹன் மூர்த்தித் தனக்கான இடத்தைத் தானே உருவாக்கி கொண்டார். ரோஹன் மூர்த்தி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா..?


Click it and Unblock the Notifications