இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனை மேம்படுத்த இளம் தலைமுறையினர் வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றும் முறைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியது இந்தியா முழுவதும் பெரும் விவாதமாக மாறியது.
இப்படியிருக்கையில் நாராயண மூர்த்தியின் பேச்சுக்கு பல நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்கள் சப்போர்ட் செய்த நிலையில் ஊழியர்கள் தரப்பில் இருந்து மனஅழுத்தம், இதய பிரச்சினைகள், உடல்நல கோளாறு ஆகிய பாதிப்புகள் வரும் எனவும் இதை முற்றிலும் எதிர்த்தனர். 70 மணிநேரம் பணி குறித்த கருத்து குறித்து தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் விவாதம் நடந்து வருகிறது.

இதனால் கடந்த சில நாட்களாகவே இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மக்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். இந்த நிலையில் நாராயண மூர்த்தி-யின் கருத்துக்கு அவருடைய மனைவி சுதா மூர்த்தி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..?
சுதா மூர்த்தியின் புத்தகங்கள், நன்கொடைகள், பல பேட்டிகள் மூலம் மக்கள் மத்தியில் ஒரு செலிப்ரிட்டியாக உயர்ந்துள்ளார். இவருடைய எளிமையாக வாழ்க்கை முறை, அனைத்து தரப்பு மக்களிடமும் இவர் பேசுவது, அணுகுவதை பலரும் பாராட்டி வரும் வேளையில் கணவரின் 70 மணிநேரம் பணி குறித்த கருத்துக்கு முக்கியமான விளக்கம் கொடுத்துள்ளார்.
டெல்லியில் நடந்த 14வது டாடா லிட் ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை சுதா மூர்த்தி கலந்துக்கொண்டார். அப்போது நாராயண மூர்த்தியன் 70 மணிநேரம் பணி குறித்த கேள்வி கேட்டபோது எனது கணவர் ஆர்வம் மற்றும் உண்மையான கடின உழைப்பு ஆகியவற்றின் மீது அதிகம் நம்பிக்கை உடையவர்.
மூர்த்தி வாரத்திற்கு 80 -90 மணிநேரம் வேலை பார்க்க கூடியவர், அதற்கு குறைவாக அவர் பணியாற்றியதே கிடையாது. அவர் எப்போதும் கடுமையான உழைப்பை நம்புபவர் மற்றும் அப்படியே வாழ்ந்தவர். அவருக்கு தோன்றியதை தான் அவர் பேசினார் என சுதா மூர்த்தி கூறினார்.
இதேவேளையில் இன்றைய கார்பரேட் உலகம் பல வகையில் மாற்றிவிட்டது, மக்கள் பல வகையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர் என்று தான் அவரிடம் சொல்லியிருப்பதாக சுதா மூர்த்தி கூறினார்.
இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இன்போசிஸ் நிறுவனம் துவங்க 10000 ரூபாய் தன்னுடைய சேமிப்பை கொடுத்து உதவியது முதல் கணவருக்காகவும், தனது பிள்ளைகளுக்காகவும் அவருடைய வேலையை ராஜினாமா செய்தது முதல் இன்போசிஸ் வளர்ச்சியில் சுதா மூர்த்தி மறைமுகமாக பங்குக்கொண்டு உள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications