இன்போசிஸ் நாராயண மூர்த்தி - மோகன்தாஸ் பாய் உடனான தி ரெக்கார்ட் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு தற்போது சர்வதேச அளவில் கிடைத்துள்ள மரியாதையை பயன்படுத்த அடுத்த 20 அல்லது 50 வருடங்களுக்கு இந்திய இளைஞர்கள் தினமும் 12 மணிநேரம் அதாவது வாரத்திற்கு 70 மணிநேரம் பணியாற்றி இந்தியாவை உலகின் 2வது அல்லது 3வது சக்திவாய்ந்த நாடாக உயர்த்த வேண்டும் என அறிவிறுத்தினார்.
இவருடைய கருத்துக்கு பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் சுதா மூர்த்தி, மோகன்தாஸ் பாய், டெக் மஹிந்திரா சிஇஓ சிபி குருனானி உட்பட பலர் ஆதரவு தெரிவித்தாலும் மருத்துவர்கள், சாமானிய ஊழியர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இன்போசிஸ் நிறுவனத்தில் பல வருடங்களாக பிரஷ்ஷர்களின் சம்பளம் உயர்த்தப்படாமல் அதே 3 முதல் 3.5 லட்சம் ரூபாய் அளவீலேயே உள்ளது. ஒவ்வொரு வருடமும் இன்போசிஸ் சிஇஓ மற்றும் ஊழியர்கள் மத்தியிலான மீடியன் சம்பள அளவு அதிகரித்து வருகிறது. இதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படாத பட்சத்தில் இளைஞர்களை மட்டும் 70 மணிநேரம் பணியாற்ற கூறுவது மிகவும் தவறு என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் 100க்கு 99 நிறுவனங்கள் வாரத்தில் 5 நாள் வேலை உடன் வாரத்திற்கு 40 மணிநேரம் பணியாற்றினாலும் பணிநேரத்திற்கும் கூடுதலாகவே பணியாற்றி வருகின்றனர். இதேபோல் பணிநேரம் முடிந்த பின்பும் வாட்ஸ்அப், ஈமெயில், போன்கால் வாயிலாக பணி குறித்த பேச்சுக்கள் நடந்து தான் வருகிறது. இப்படியிருக்கையில் தினமும் 12 மணிநேர பணி குறித்த பேச்சு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது ஊழியர்கள் 48 மணிநேரத்திற்கு சம்பளம் பெற்று வரும் வேளையில் 70 மணிநேரம் பணியாற்றினால் சம்பளத்தை நிறுவனங்கள் உயர்த்த வேண்டுமா அல்லது வேண்டாமா என பசந்த் மேகேஷ்வரி வெல்த் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் பசந்த் மேகேஷ்வரி டிவிட்டரில் கேள்வி கேட்டு உள்ளார்.
நாராயண மூர்த்தி பேசும் போது இளைஞர்கள் என பொதுவாக தான் பேசியுள்ளார், இதில் இன்போசிஸ் போன்ற நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர்களையும் குறிக்கும். மேலும் மோகன்தாஸ் பாய் கூறுவது போல 30 வயதுக்கு கீழ் என்று அவர் பேசவில்லை. பர்சனல் டெவலப்மென்ட்-க்காக அதிக நேரத்தை செலவிடவும் நாராணய மூர்த்தி குறிப்பிடவில்லை.
இதை தொடர்ந்து அர்ஜூன் என்பவர் இந்தியாவில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்த இன்போசிஸ் நாராயண மூர்த்தி-க்கு நன்றி, ஆனால் வாரத்தில் 70 மணிநேரம் அதுவும் 3.75 லட்சம் ரூபாய் சம்பளத்தில் பெங்களூரில் வாழ்வது எப்படி..? உங்க வாழ்க்கையை நிம்மதியாக வாழுங்க சார். இளைஞர்களை வாட்டி வதைக்காதீர்கள் என டிவீட் செய்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications