பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனர்களுள் ஒருவரான nrநாராயணமூர்த்திக்கு சொந்தமான நிறுவனம் தான் கட்டமரன். இந்நிறுவனத்தை நாராயணமூர்த்தியும் அவருடைய மனைவி சுதாமூர்த்தியும் இணைந்து நடத்துகின்றனர்.
புதிய தொழில்களில் முதலீடு செய்வது தான் இந்நிறுவனத்தின் பிரதான வேலை. கடந்த 2014 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தோடு இணைந்து 51 : 49 என்ற கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டமரன் நிறுவனம் கிளவுட் டெயில் என்ற ஒரு கூட்டு நிறுவனத்தை அமைத்தது. கிளவுட் டெயில் என்பது ஒரு தளம், இந்த தளத்தின் வாயிலாக சாதாரண மக்கள் தங்களுடைய பொருட்களை எப்படி அமேசான் வழியாக விற்பனை செய்வது என்பது குறித்த பயிற்சியை வழங்க கூடிய தளமாக செயல்பட்டது.

ஆயிரக்கணக்கான வணிகர்கள் அமேசான் போன்ற இகாமர்ஸ் தளங்களில் பெரிய வணிகர்களாக மாற இது உதவியது. 2021 ஆம் ஆண்டு இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து கிளவுட் டெயில் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்தன. ஆனால் இந்த எட்டு ஆண்டுகளிலேயே நாராயண மூர்த்திக்கு சொந்தமான கட்டமரன் நிறுவனம் கிளவுட் டெயில் நிறுவனத்தின் வாயிலாக 915 கோடி ரூபாய் லாபமாக ஈட்டியது. 417 கோடி ரூபாய் முதலீடு செய்து 915 கோடி ரூபாயை லாபமாக பெற்றது.
தற்போது அதே போன்ற ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்குவதற்கு கட்டமரன் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், நவீன தொழில்நுட்பங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் பெரிய நிறுவனத்தோடு கூட்டமைப்பு செய்து இந்திய பொருட்களை சர்வதேச அளவிலும் சர்வதேச பொருட்களை இந்திய அளவிலும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அமேசான் நிறுவனம் இந்தியாவிற்கு வந்தபோது பெரும்பாலான இந்திய வணிகர்கள் மத்தியில் அந்த நிறுவனம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது , அவர்களுக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பினை உருவாக்கி தந்தது கிளவுட் டெயில் தற்போது அதேபோன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே கட்டமரன் நிறுவனத்தின் நோக்கம் என இதன் மேலாண் இயக்குனரான ரங்கநாத் மணி கண்ட்ரோல் தளத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் குறிப்பிட்டு இருக்கிறார் .
குறைந்த அளவு லாபத்தில் இயங்கக்கூடிய அதே வேலையில் தனித்துவமான தொழில்களில் இருக்கக்கூடிய நிறுவனங்களை உலக அளவிலான சந்தைக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என அவர் கூறியிருக்கிறார் . இந்த முறை எங்களுடைய கவனம் பெரும்பாலும் மின்சார வாகனம் அது சம்பந்தப்பட்ட பொருட்கள் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றின் மீது இருக்கும் எனக் கூறியிருக்கிறார். ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க முன்வந்திருப்பது மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் இந்தியா மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது என கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications