இன்போசிஸ் நிறுவனம் மார்ச் காலாண்டு முடிவுகளில் லாபத்தில் 12 சதவீதம் சரிவை கண்டது பெரும் பாதிப்பாக பார்க்கப்பட்ட நிலையில், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் வெளியேற்றத்த கட்டுப்படுத்த Infy நிர்வாகம் ஒரு பங்குகிற்கு 22 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை கொடுக்க முடிவு செய்தது. இந்த ஈவுத்தொகை யாருக்கு பெரியதாக பலன் கொடுத்துள்ளது என்று பார்த்தால் இது Infosys நாராயணமூர்த்தி குடும்பத்திற்கு தான் அதிகப்படியான லாபத்தை கொடுத்துள்ளது எப்படி தெரியுமா..?
இந்த 22 ரூபாய் டிவிடெண்ட் தொகையை பெறுவதற்கு தகுதிபெறும் பங்குதாரர்களை கணக்கெடுக்க 'ரெக்கார்ட் தேதி' மே 30 என இன்போசிஸ் நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் மே 30ஆம் தேதி வர்த்தக முடிவில் யாரெல்லாம் இன்போசிஸ் பங்குகளை வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த ஈவுத்தொகை கிடைக்கும். டிவிடெண்ட் தொகை மூலம் நாராயண மூர்த்தியின் பேரனும், அவரது குடும்பமும் பல கோடிகளை அள்ளப்போகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி தனது 17 மாத பேரனான ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி பல கோடிகளை அள்ளப்போகிறார் என்பது தான் தற்போது இணையம் முழுவதும் பேசி வருகின்றனர். Born with Silver spoon என்பதை தாண்டி ஏகாக்ரா ரோஹன் மூர்த்தி டைமண்ட் ஸ்பூன் உடன் பிறந்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏகாக்ரா நான்கு மாத குழந்தையாக இருந்தபோது அவரது தாத்தா நாராயண மூர்த்தி இன்போசிஸின் 15 லட்சம் பங்குகளை பரிசாக வழங்கினார். இந்த பங்குகள் வாயிலாகவே தற்போது ஈவுத்தொகை பெற உள்ளார். இது நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 0.04% ஆகும். இந்த டிவிடெண்ட் மூலம் இந்த 17 மாத குழந்தை சுமார் 3.3 கோடி ரூபாய் வருமானம் பெற உள்ளது.
நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோரின் மகன் தான் ஏகாக்ரா, இந்த 15 லட்சம் பங்குகளின் மொத்த மதிப்பு 240 கோடி ரூபாய் என்பது தான் முக்கியமான விஷயம். இன்போசில் பங்கு மதிப்பு 2025ஆம் ஆண்டில் 24 சதவீதம் சரிந்த காரணத்தால் இதன் மதிப்பு 240 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும், நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி, டிசம்பர் 2024 காலாண்டு நிலவரப்படி நிறுவனத்தின் 38.9 லட்சம் பங்குகளை (1.04% பங்கு) வைத்திருக்கிறார். இந்த டிவிடெண்ட் அறிவிப்பின் மூலம் அவர் சுமார் 85.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்ட உள்ளார்.
நாராயண மூர்த்தி அவர்களும் இந்த டிவிடெண்ட் மூலம் 33.3 கோடி ரூபாய் வருமானம் பெற உள்ளார். அதேபோல், அவரது மனைவி சுதா மூர்த்திக்கு 76 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டிவிடெண்ட் தொகை நாராயணமூர்த்தி குடும்பத்தினர் மட்டும் அல்லாமல் அனைத்து நிறுவனர்கள் அவர்களது குடும்பமும் பெற உள்ளனர். மொத்தமாக நாராயண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் இந்த 22 ரூபாய் டிவிடெண்ட் மூலம் சுமார் 198.1 கோடி ரூபாய் வருமானம் பெற உள்ளனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications