பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் வேளையில், மோடி அரசின் அடுத்த 5 வருடத் திட்டம் என்ன என்பதை தெரிந்துகொள்ள முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர். குறிப்பாக ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கை குறித்து தெரிந்துகொள்ள முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் மக்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
ஏற்கனவே பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தாலும், ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தான் மோடி அரசின் முழு திட்டமும் தெரியும். ஆனால் இதற்கு முன்பே கடந்த 2 நாட்களில் மோடி அரசின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அடுத்த 5 வருஷம் மோடியின் ஓரே டார்கெட் இதுவாக தான் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

இதுமட்டும் உறுதியாகும் பட்சத்தில் இந்தியப் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும், நுகர்விலும் 360 டிகிரி மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அப்படி என்ன திட்டத்தைக் கொண்டு வரப் போகிறார்..?
மோடியின் 3.0 ஆட்சியின் முதல் 100 நாள் செயல்பாட்டில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளை கட்டும் திட்டத்தை அறிவித்த அடுத்த நாளே, கிரமபுற வளர்ச்சியில் மத்திய அரசு பெரிய அளவிலான கவனத்தைச் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரமபுற வளர்ச்சியில் மோடி அரசு கிராமப்புற வீட்டுத் திட்டத்தின் கீழ் கிராமபுற மக்களுக்கு அதிகப்படியான மானியம், உறுதியான வேலைவாய்ப்பு திட்டம், நகரங்களுக்கும் கிராமங்களுக்குமான சாலை வலையமைப்பை விரிவுபடுத்துதல், கிரமபுற வறுமையை ஒழிப்பு, பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், மத்திய அரசின் இந்த முயற்சி ஊரக வளர்ச்சிக்கு கூடுதல் வலு சேர்க்கும். இந்த வகையில் ஏற்கனவே கிரமபுற வளர்ச்சிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள், அப்டேட் செய்யப்பட்ட திட்டங்களை புதிய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க உள்ளார்.
கிரமபுற வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பது குறைவான தனியார் நுகர்வோர் செலவுகள், குறைவான சேமிப்பு அளவுகள் தான். கடந்த நிதியாண்டில் பொருளாதாரம் 8.2% விரிவடைந்தபோதும், தனியார் நுகர்வோர் செலவுகள் கிராமபுறத்தில் வெறும் 4% மட்டுமே வளர்ச்சி அடைந்திருந்தது. இதை மேம்படுத்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கில் தான் தற்போது கிராமபுறத்தை டார்கெட் செய்து பல திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.
வீட்டு வசதி திட்டம்: PMAY (கிராமின்) திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தற்போதைய 1.2-1.3 லட்சம் ரூபாய் உதவித் தொகையை, பிராந்தியங்களைப் பொறுத்து, ஒரு வீட்டிற்கு 2 லட்சமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற வேலைவாய்ப்புகள்: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என கூறப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGS) மேலும் வலுவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றுவதற்கான திட்டத்தை மோடி அரசு திட்டமிட்டு வருகிறது.
நிதியமைச்சகம் இத்திட்டத்தில் இருக்கும் நிதி இழப்புகளையும், சுரண்டல்களையும் தடுக்கும் பணிகளைச் செய்து வருகிறது. தமிழ்நாடு உட்பட பல வளர்ச்சி அடைந்த தென் மாநிலங்கள் பங்கு இதில் அதிகமாக இருக்கும் வேளையில் ஏழை மாநிலங்கள் இதில் பங்கீடு மிகவும் குறைவாக உள்ளது.
கிராமப்புற சாலைகள்: நகரங்களுக்கும் - கிராமங்களுக்கும் இடைய உள்ள சாலைகள், கிராமத்தின் முக்கிய சாலைகள் ஆகியவற்றை தற்போதுள்ள வலையமைப்பை கணிசமாக விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும், அவற்றை அருகிலுள்ள முக்கிய நகரங்கள் மற்றும் சந்தைகளுடன் இணைக்கவும் பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டத்தின் கீழ் மோடி 3.0 அரசு மறுசீரமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) திட்டம் மூலம் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சாலைகளை அமைப்பதைத் தாண்டி, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமூகம் அல்லது விவசாய மையங்களை இணைப்பது தான் திட்டம் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications