ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களையும், சமூகத்திற்கு ஏதாவது வாக்குறுதி கொடுத்து மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்ற முக்கிய இழக்குடன் பாஜக கட்சி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி முதல் பல முக்கிய தலைவர்கள் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய துவங்கியுள்ளனர்.
இதில் முக்கியமாக பெண் வாக்காளர்களை கவரும் வகையில் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என அக்கட்சி ஏற்கனவே உறுதியளித்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு, பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றொரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார்.

தற்போது பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெற்று வரும் வேளையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மாநில பாஜக அரசு இத்தொகையை இரட்டிப்பு செய்யும் வகையில் 12000 அளிக்கும் என பிரதமர் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய போது, விவசாயிகளை ஏமாற்றியவர்கள் தப்ப மாட்டார்கள் என்று கூறினார். விவசாயிகளிடம் இருந்து MSP விலையில் பயிர்களை கொள்முதல் செய்ய ராஜஸ்தான் பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இது மட்டுமின்றி, பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கும் போனஸ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் பிரதமர் மோடி கொடுத்த மற்றொரு வாக்குறுதி, அம்மாநில மக்கள் மத்தியில் பெரிய அளவிலான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை மிகவும் அதிகம் என்றும், பாஜக ஆட்சிக்கு வந்தால் எரிபொருள் விலை கட்டாயம் மறுஆய்வு செய்து குறைக்கப்படும் என என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பெட்ரோல் விலை குறித்து மோடி பேசுகையில் ராஜஸ்தானின் அண்டை மாநிலங்களில் பிஜேபி ஆட்சி இருக்கிறது, ராஜஸ்தானுடன் ஒப்பிடும்போது அங்கு பெட்ரோல் விலை ரூ.12-13 குறைவாக விற்கப்படுகிறது.
ஆனால் ராஜஸ்தானில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு பெட்ரோலை அதிக விலைக்கு விற்கிறது. நான் உத்தரவாதம் தருகிறேன் பிஜேபி ஆட்சிக்கு வந்த பின்பு பெட்ரோல், டீசல் விலை மறுஆய்வு செய்யப்பட்டு குறைக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
200 சட்டமன்ற இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது, டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ராஜஸ்தான் மாநில தேர்தலின் வெற்றி 2024 பொது தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் பிஜேபி அரசும், பிரதமர் மோடியும் அனைத்து தரப்பு மக்களையும் கவர அதிகப்படியான வாக்குறுதிகளை அள்ளி வீச துவங்கியுள்ளனர்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications