மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 4ஆம் தேதி அறிவித்தார். இந்த நீட்டிப்பு மூலம் சுமார் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் சத்தீஸ்கரில் தேர்தல் நடைபெறும் பேரணியில் பிரதமர் அறிவித்தார்.
இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். சொந்த நிதி ஆதாயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 4ஆம் தேதி நடந்த பிரச்சார பேரணியில் குற்றம் சாட்டினார்.

கொரோனா காலத்தில் மக்கள் நலனுக்காக 2020 ஏப்ரல் முதல் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 80 கோடி இந்தியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மோடி அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தை தான் நரேந்திர மோடி அடுத்த 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
நரேந்திர மோடி இக்கூட்டதில் பேசுகையில் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை உள்ள ஏழைகளை காங்கிரஸ் வெறுக்கிறது, ஏழைகள் எப்போதும் தன் முன் நின்று மன்றாட வேண்டும் என்று விரும்புகிறது, எனவே ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது என்றார்.
மத்திய அரசு ஏழைகளுக்காக தொடங்கும் திட்டங்களை காங்கிரஸ் அரசு தனது எல்லாப் பலத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு வேலையையும் நிறுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸின் அநீதியையும் ஊழலையும் பொறுத்துக் கொண்டுள்ளீர்கள். என்னை நம்புங்கள் இன்னும் 30 நாட்களே உள்ளது. அதன் பிறகு இந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள் என்றும் சத்தீஸ்கரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் பேசினார்.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ம் தேதி நடைபெறுவதால் அம்மாநிலத்தில் பிரதமர் உட்பட பல தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இலவச உணவு திட்டத்தை அடுத்த 6 மாதங்களுக்குத் தொடர வேண்டும் என்றால் மத்திய அரசுக்கு 700 பில்லியன் ரூபாய் செலவாகும்.


Click it and Unblock the Notifications