சென்னை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது ஏப்ரல் - ஜூன் காலாண்டில், வருடாந்திர அடிப்படையில் 6.7% வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய அரசு இன்று மாலை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது. ஆனால் இது 15 மாதங்களில் குறைந்த வளர்ச்சி என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கீட்டை வகித்து முதன்மைத் துறைகளாகக் கருதப்படும், விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில்கள் 2023-24 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 4.2% ஆக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் 2.7% ஆகச் சரிவு கண்டுள்ளது.

மேலும், உற்பத்தி மற்றும் மின்சாரத் தொழில்களை உள்ளடக்கிய இரண்டாம்கட்ட தொழில்துறைகள், வருடாந்திர அளவில் குறிப்பிடத்தக்க வகையில் 8.4% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்தியாவின் இரண்டாம் துறையின் வளர்ச்சி விகிதம் 2023-24 நிதியாண்டின் அதே காலாண்டில் 5.9% ஆக இருந்தது.
இதில் முக்கியமாக விவசாய துறை 2023-24 நிதியாண்டில் 3.7% வளர்ச்சியைக் கண்ட நிலையில், 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 2.0% ஆக குறைந்ததுள்ளது.
மேலும் நாட்டின் உற்பத்தித் துறை, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வருடாந்திர அளவில் 7.0% வளர்ச்சியைக் கண்டது. உற்பத்தித் துறை 2023-24 நிதியாண்டில் 5.0% வளர்ச்சியைக் கண்டது.
தொழில், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் 2023-24 நிதியாண்டில் 9.7% ஆக இருந்ததில் இருந்து தற்போது 5.7% குறைந்ததுள்ளது. இதற்கிடையில், நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் சேவைகள் 2023-24 நிதியாண்டில் 12.6% ஆக இருந்ததில் இருந்து 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.1% குறைந்துள்ளது.
அரசு நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு துறை 2023-24 நிதியாண்டில் 8.3% ஆக இருந்ததில் இருந்து நடப்பு நிதியாண்டில் 9.5% வளர்ச்சியைக் கண்டுள்ளது. மே மாதம் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அரசு அமைக்கத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான தரவு முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), ஆகஸ்ட் மாதம் நடத்திய தனது நாணய கொள்கை குழு கூட்டத்தின் போது, இந்தியாவின் GDP 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 7.1% வளரும் என்று கணித்தது. ஆனால் தற்போது 6.7 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது மற்றொரு சோகமான விஷயம்.


Click it and Unblock the Notifications