பொதுத் தேர்தல் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, 6ஆம் கட்ட தேர்தல் மே 25 ஆம் தேதி முடிந்த நிலையில், ஜூன் 1 ஆம் தேதி கடைசிக் கட்டம் அதாவது 7ஆம் கட்ட தேர்தல் நடக்க உள்ளது. கடைசி கட்டம் என்பதால் தேர்தல் பிரச்சாரங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது, குறிப்பாகச் சமீபத்தில் மோடியின் பேச்சு இணையவாசிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தற்போது பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் அல்லாமல் அம்பானி மற்றும் அதானியையும் அவருடன் சேர்த்து விமர்சனம் செய்துள்ளார்.

நரேந்திர மோடி தனது ஆட்சியில் 22-25 ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை உருவாக்கியுள்ளார் என்று இந்தியப் பிரதமர் மீது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, "நரேந்திர மோடி தனது ஆட்சியில் 22-25 ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை உருவாக்கியுள்ளார், அவர்களின் புதிய பெயர்கள் அதானி மற்றும் அம்பானி.
அம்பானியும், அதானியும் ராஜா-வாக இருக்கும் வேளையில் நரேந்திர மோடி அவர்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கிறார்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்
கௌதம் அதானி, முகேஷ் அம்பானி உள்ளிட்ட நாட்டின் டாப் ஐந்து தொழிலதிபர்களுக்குப் பிரதமர் சாதகமாக இருப்பதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதில் முக்கியமானதாக ராகுல் காந்தி அம்பானிக்கும் அதானிக்காகவும் நரேந்திர மோடி 24 மணி நேரமும் உழைக்கிறார் என்ற கூறியது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு, ஏழைகள், விவசாயிகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். நிலம், இட ஒதுக்கீடு, கல்வி, சுகாதாரம் என எது உங்களுக்கு கிடைத்ததோ, அது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டது.
மன்னர்களின் ஆட்சியைப் போன்ற இப்போதும் ஆட்சி செய்ய பாஜக விரும்புகிறது. அவர்கள் 22-25 பேர் கொண்ட அரசாங்கத்தை உருவாக்க விரும்புகிறார்கள். நரேந்திர மோடி அவர்களுக்காக 24x7 வேலை செய்கிறார்.
பிஜேபி அவர்களது ஆட்சி காலத்தில் சில பில்லியனர்களை உருவாக்கினார்கள், நாங்கள் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்குவோம். இந்தியாவில் அனைத்து குடும்பங்களிலிருந்தும் தலா ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணம் நேரடியாக அவரது வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் என்றார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியின் 'கடவுளால் அனுப்பப்பட்டவர்' என்ற கருத்து பெரும் சர்ச்சை ஆன நிலையில் ராகுல் காந்தி, "பிரதமர் மோடி கூறுகிறார், தான் எந்த முடிவும் எடுக்கவில்லை, அது பரமாத்மாவால் எடுக்கப்படுகிறது என்று கூறுகிறார். மேலும் அவர் தான் இயற்கையாகப் பிறந்தவர் அல்ல என்றும், பரமாத்மாவின் செய்தியாளர் என்று கூறுகிறார்.
அவர் ஏன் இந்த கதையை கூறுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா. தேர்தல் முடிந்ததும் அதானியைப் பற்றி ED அவரிடம் கேட்கும் போது, அதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறுவார், மேலும் அவர் அவ்வாறு செய்யுமாறு பர்மாத்மா கேட்டுக் கொண்டார் எனவும் கூறி தப்பித்துக்கொள்வார் என ராகுல் காந்தி இக்கூட்டத்தில் பேசினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேலும் கூறுகையில், "பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகள் பற்றி கூற வேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம், அவர் வேலைகளை எப்படி முடக்கினார் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்வோம், இத்திட்டத்தை ராணுவம் விரும்பவில்லை என பேசினார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications