நிலாவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓட்டம். நினைத்துப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ நாடுகள் நிலாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்காக முனைப்பாக இருக்கும்வேளையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலாவில் ரயில்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது.
நிலாவில் முதல் முழுமையாக செயல்படும் ரயில்வே நிலையத்தையும் அமைக்க திட்டமிட்டுள்ளது நாசா. ஆனால் இந்த ரயில் பூமியில் உள்ளது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருக்கும்.

ஃப்ளெக்ஸிபிள் லெவிடேஷன் ஆன் அ டிராக் எனப்படும் ஃப்ளோட் அமைப்பு காந்த விசையைப் பயன்படுத்தி மிதக்கும் 3 கட்ட ரயில் டிராக்கில் இயங்கும்.
கிராபைட்டில் அமைக்கப்பட்ட பாதையில் காந்த விசையினால் மிதந்தபடி இந்த ரயில்கள் இயங்கும். ஃப்ளோட் ரோபோக்களுக்கு அசையும் பாகங்கள் இருக்காது என்றும் ரயில் பாதையின் மீது மிதப்பதால் உராய்வு இருக்காது என்றும் நாசா கூறியுள்ளது.
வழக்கமான இருப்புப் பாதைகள், கேபிள் வயர்கள் இல்லாமல் இந்த ரயில்பாதைகள் சந்திர மண்டலத்தின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்தப் பாதையில் நொடிக்கு 0.5 மீட்டர் வேகத்தில் பளுவை ஃப்ளோட் ரோபோக்கள் இழுத்துச் செல்லும். அதிகபட்சமாக 1,00,000 கிலோ எடையை பல கி.மீ. தொலைவுக்கு இழுத்துச் செல்லும்.
தூசி நிறைந்த கடினமான சந்திர மண்டலத்தில் ஃப்ளோட் ரோபோக்கள் ஆட்டோமேடிக்காக இயங்கும். இதில் பயன்படுத்தப்படும் ரயில் பாதைகளை சுருட்டி வேறு இடத்தில் கொண்டு சென்று புதிதாக அமைக்கலாம்.
வேலை வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில் துணை அளவிலான ரோபோ, டிராக் முன்மாதிரிகளின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சோதனை ஆகியவற்றைக் காணும்.
சந்திரன் முதல் செவ்வாய் வரையிலான திட்டம் மற்றும் ரோபோட்டிக் லூனார் சர்ஃபேஸ் ஆபரேஷன்ஸ் 2 (RLSO2) போன்ற திட்டங்களில், 2030 களில் நிலையான சந்திர தளத்தின் தினசரி செயல்பாடுகளுக்கு நீடித்த, நீண்ட ஆயுட்கால ரோபோ போக்குவரத்து அமைப்பு முக்கியமானதாக இருக்கும் என்று நாசா கூறியது.
நிலாவில் நாசா ரயில்வே நிலையங்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க திட்டமிடும் அதேவளையில் ரஷ்யா விண்வெளியில் மிகப் பிரமாண்டமான அணுசக்தி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விண்வெளியில் நிரந்தர விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தையும் அமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இந்தியாவோ சந்திரயானுக்குப் பின் மங்கள்யான், ககன்யான், நிலாவுக்கு மனிதனை அனுப்பும் திட்டங்கள் என்று மும்முரமாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளி மிகவும் பிஸியாகிவிடும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications