இந்தியாவின் வெகு ஜன மக்களுக்கு "ப்ராஜெக்ட்" "லே ஆஃப்" "Firing" "Six digit Salary" போன்ற வார்த்தைகளை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்தியதே, ஐடி துறை தான்.
இன்று வரை, லே ஆஃப் விளிம்பில் அதிகம் போராடிக் கொண்டு இருப்பவர்களும், அதே ஐடி துறை தான். கொரோனா பாதிப்பில், பெரும்பாலும் எல்லா துறைகளும் பாரபட்சம் இல்லாமல் அடி வாங்கி இருக்கின்றன. அதில் ஐடி துறையும் உண்டு.
இந்த கொரோனா பிரச்சனையில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், ஐடி துறை, தங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் விதத்திலும் சில பகீர் கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்கள்.
கோரிக்கைகள்
இதுவரை, இந்திய அரசு மற்றும் மாநில அரசாங்கத்தின் தொழிலாளர் நலச் சட்ட திட்டங்கள் தான், இந்தியாவில் இருக்கும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களை ஓரளவுக்காவது காப்பாற்றிக் கொண்டு இருந்தது. இப்போது அந்த சட்ட திட்டங்களில் இருந்தே கொரோனாவைக் காரணம் காட்டி, ஐடி நிறுவனங்கள் விலக்கு கேட்டு இருக்கிறார்கள்.
யார் கேட்டார்கள்
இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் சார்பாக, நாஸ்காம் அமைப்பு, மாநில அரசுகளிடம் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான சட்டங்களில் சில தளர்வுகள் மற்றும் விலக்குகளைக் கேட்டு கோரிக்கைகளை வைத்து இருப்பதாக எகமானிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அவைகளைத் தான் ஒவ்வொன்றாகப் பார்க்க இருக்கிறோம். முதலில் லே ஆஃப் தளர்வில் இருந்து தொடங்குவோம்.
1. தற்காலிக லே ஆஃப்-க்கு அனுமதி
கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக, லாக் டவுன் ஆரம்பிக்கும் போதே, ஊழியர்களை லே ஆஃப் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடியே கம்பெனிகளுக்கு கோரிக்கை வைத்தார். இப்போது நாஸ்காம் அமைப்பு, ஐடி கம்பெனிகளில் கூடுதலாக இருக்கும் ஊழியர்களை தற்காலிகமாக லே ஆஃப் செய்யவும், விடுப்பில் அனுப்பவும் மாநில அரசிடம் அனுமதி கோரி இருக்கிறார்கள். சில ஸ்டார்ட் அப் கம்பெனிகள், கண்ணை மூடிக் கொண்டு லே ஆஃப் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
2. இரவில் பெண்கள் ஷிஃப்ட்
அதே போல, பெண்களை, வீட்டில் இருந்த படியே இரவு ஷிஃப்ட்களில் வேலை பார்க்க அனுமதிக்குமாறும், நாஸ்காம் அமைப்பு, மாநில அரசுகளிடம் அனுமதி கோரி இருக்கிறார்கள். இது போக, தினமும் ஊழியர்கள் வேலை பார்க்கும் வேலை நேரத்தை அதிகரித்துக் கொள்ளவும் அனுமதிக்குமாறு கேட்டு இருக்கிறார்கள்.
3. 21 நாள் நோட்டீஸ்
அது போக, தற்போது ஐடி கம்பெனிகள் தங்களின் கொள்கைகளில் ஏதாவது மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றால் 21 நாட்களுக்கு முன்பே அரசு மற்றும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த 21 நாள் விதியை ரத்து செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து இருக்கிறது நாஸ்காம் அமைப்பு.
4. 50 % நஷ்ட ஈடு
மேலே சொன்னவைகளை எல்லாம் விட மிகவும் கொடுமையான விஷயம் இது தான். தற்காலிகமாக லே ஆஃப் செய்யப்படும் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையில் 50 % அல்லது குறைந்தபட்ச சம்பளம் (minimum wages), இதில் எது குறைவோ அதைக் கொடுத்து அனுப்பவும் அனுமதி கோரி இருக்கிறது நாஸ்காம். இதில் ஊழியர்களுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய பணத்தில் (statutory entitlements) எந்த சமரசமும் இல்லாமல் மேலே சொன்னதைச் செய்ய மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டு இருப்பதாகச் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ்.
புத்திசாலித்தனம்
லே ஆஃப் என்றாலே வேலையில் இருந்து ஒரு ஊழியரை வீட்டுக்கு அனுப்புவது தான். அதில் என்ன தற்காலிக லே ஆஃப். அதே போல, ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நஷ்ட ஈட்டில் 50 % அல்லது குறைந்த பட்ச சம்பளம் (Minimum Wage) இதில் எது குறைவோ அந்த தொகையை மட்டும் கொடுத்து ஊழியரை வீட்டுக்கு அனுப்ப அனுமதி கேடிறார்கள். ஆனால் அடுத்த வரியில், ஊழியர்களுக்குச் சேர வேண்டிய பணத்தில் (Statutory Entitlement) எந்த சமரசமும் இல்லை என்கிறார்கள். இது நாஸ்காமின் சாதூர்யமான வார்த்தை பயன்பாட்டைத் தான் காட்டுகிறது. அப்படி எல்லம் இல்லை என்றால், இவைகளை நாஸ்காம் தெளிவாக விளக்கி இருக்க வேண்டும்.
உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமா
சில மாநிலங்களில், தொழிலாளர் சட்டங்கள் (Labor Law), தொழிற்சாலைச் சட்டங்கள் (Factories Act) மற்றும் விதிமுறைகளை கடைபிடிப்பதில், உற்பத்தி & தொழில் துறை சார் நிறுவனங்களுக்கு தளர்வு அளித்து இருக்கிறார்களாம். ஆனால் அதில் ஐடி சார்ந்த துறைகளுக்கு வழங்கவில்லை எனவும் சொல்லி இருக்கிறது நாஸ்காம்.
உத்திரப் பிரதேசம்
உதாரணமாக, உத்திரப் பிரதேசத்தில் ஒரு சில சட்ட திட்டங்களைத் தவிர மற்ற எல்லா சட்டங்களை கடைபிடிப்பதில் இருந்தும் தளர்வு அளித்து இருக்கிறார்களாம். இந்த இக்கட்டான சூழலில், இந்திய ஐடி துறைக்கு, ஒரு பெரிய தொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தம் மிகவும் அவசியமாக இருக்கிறது. அப்போது தான் ஐடி தொழில் மீண்டும் பழைய நிலைக்கு வரும் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
யாருக்கு பயன் - கம்பெனிகள் பட்டியல்
ஒருவேளை மாநில அரசுகள், நாஸ்காமின் லே ஆஃப், வேலை நேரம், பெண்கள் இரவு ஷிஃப்ட், 21 நாள் நோட்டிஸ், 50 % நஷ்ட டு (அ) குறைந்தபட்ச சம்பளம்... போன்ற கோரிக்கைகளுக்கு, மாநில அரசுகள் செவி சாய்த்தால், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜி... போன்ற கம்பெனிகள் அதிகம் பயன் அடைவார்களாம். இந்திய ஐடி துறை கடந்த 15 வருடங்களாக, தொழிலாளர் சட்ட மாற்றாங்களைக் கோரி வருகிறார்களாம். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, தங்கள் இலக்கை அடைய நினைக்கிறார்கள்.
நீண்ட கால தீர்வு தேவை
இந்த நெருக்கடியான கொரோனா சூழலில், கம்பெனிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, சில நூறு ஊழியர்களை லே ஆஃப் செய்வதை தவறு சொல்ல முடியவில்லை. அதே நேரத்தில், வேலை குறித்து, அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகிக் கொண்டு இருக்கும், நம் ஐடி நண்பர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது என்றும் தெரியவில்லை. இதற்கு எல்லாம் அரசு தான் ஏதாவது ஒரு நீண்ட கால தீர்வைக் கொண்டு வர வேண்டும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications