இயற்கை எரிவாயு விலை 25% குறைய வாய்ப்பு.. மக்களுக்கு லாபமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை சர்வதேச விலைக்கு ஏற்ப மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் வருகிற ஏப்ரல் மாத துவக்கத்தில் எரிவாயுவின் விலை சுமார் 25 சதவீதம் வரையில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் மக்களுக்கு என்ன லாபம்..? கண்டிப்பாக உள்ளது.

முறையான வேலை வாய்ப்புடன் 15% கூடுதல் சம்பளம் கொடுக்கலாம்! டாடா குழும தலைவர் நம்பிக்கை!

ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா

ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான இயற்கை எரிவாயு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களால் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் தற்போதைய விலையை விலையான 3.23 டாலரை ஏப்ரல் 1 முதல் 6 மாதம் வரையிலான காலத்திற்கு ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்-க்கு 2.5 டாலராகக் குறைக்கப்பட உள்ளது.

விலை குறைப்பு

விலை குறைப்பு

கடந்த 6 மாதத்தில் 2வது முறையாக இயற்கை எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இப்புதிய 2.5 டாலர் விலை கடந்த 2.5 வருடத்தில் மிகவும் குறைவான விலை என்பது கவனிக்க வேண்டியவை.

இதோடு கடினமான இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் விலை 8.43 டாலரில் இருந்து 5.50 டாலராகக் குறைக்கப்பட உள்ளது. இதுவும் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

விலை நிர்ணயம்
 

விலை நிர்ணயம்

இயற்கை எரிவாயு விலையின் அடிப்படையில் தான் விவசாய உரம், மின்சாரம் ஆகியவற்றும் தயாரிக்கப்படுகிறது. இதேபோல் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களின் எரிவாயுவாகப் பயன்படுத்தும் CNG ஆகியவற்றின் விலையும் இயற்கை எரிவாயுவின் விலை அடைப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது.

2 முறை விலை மாற்றம்

2 முறை விலை மாற்றம்

ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் இயற்கை எரிவாயுவின் விலையைச் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வரிசையில் தான் தற்போது ஏப்ரல் 1ஆம் தேதி விலை மாற்றம் செய்யப்பட உள்ளது.

லாபம் நஷ்டம்

லாபம் நஷ்டம்

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயற்கை எரிவாயு விலை குறையும் காரணத்தால் சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை குறையும். இதற்கு எதிர்மறையாக ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களின் வருவாய் குறையும் காரணத்தால் முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவனங்களின் மீதான முதலீடு குறையும், இதனால் பங்கின் விலையும் குறைய வாய்ப்புகள் உள்ளது.

சிலிண்டர் விலை அதிகரிப்பு

சிலிண்டர் விலை அதிகரிப்பு

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து 6வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது சாமானியர்களின் பாக்கெட்டுகளை பதம் பார்த்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 30 லட்சம் சிலிண்டர்களை வழங்கும் அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் படி சென்னையில் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மானியமில்லா சிலிண்டர் விலை 734 ரூபாய். இந்த நிலையில் தற்போது சென்னையில் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Natural gas prices cut by 25 per cent from April 1

Natural gas prices in India are likely to be cut by a steep 25 per cent beginning April, in line with the slump in global rates. The price of most of the natural gas produced by state-owned ONGC and Oil India Ltd, which account for the bulk of India's existing gas output, is likely to be cut to around USD 2.5 per million British thermal unit for the six-month period beginning April 1.
Story first published: Monday, February 24, 2020, 15:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X