ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது மிக மோசமான விலையினை எட்டியது. இன்றளவிலும் சப்ளை சங்கிலியில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் எண்ணெய் விலையானது 110 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 110 - 111 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
இதே தற்போது சர்வதேச சந்தையில் விலையானது தற்போது 8.788 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
14 வருட உச்சத்தில் இயற்கை எரிவாயு
இதற்கிடையில் இயற்கை எரிவாயு விலையானது 14 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. இது உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில் , ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகளும் தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னணி ஏற்றுமதியாளர்
எனினும் ஐரோப்பிய நாடுகளின் இந்த திட்டத்திற்கு ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளராக இருக்கும் ரஷ்யா, முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகளும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தேவை அதிகரிப்பு
அமெரிக்கா தனது பெட்ரோலிய இருப்புகளை நிரப்ப 60 மில்லியன் பேரல்களை வாங்கவுள்ளது. இது கச்சா எண்ணெய் விலையை மேலும் ஊக்குவிக்கலாம். இதே போல இயற்கை எரிவாயு விலையும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் மற்ற கமாடிட்டிகளில் புராபிட் புக்கிங் செய்யும் நிலையில், இதுவும் மற்ற கமாடிட்டிகளின் விலையை ஊக்குவிக்கலாம்.
கொரோனாவில் இருந்து மீட்சி
கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தேவையும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இது எரிபொருள் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications