இந்தியாவில் வாகனங்களுக்கு CNG தயாரிக்கவும், சமையலுக்கு PNG தயாரிக்கவும் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவின் விலை இம்மாதம் (ஜூலை) 5% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலால் எண்ணெய் விலைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எண்ணெய் விலை உயர்வானது, எரிவாயு விலையையும் நேரடியாக பாதிப்பது வழக்கமாகும். இதுதொடர்பாக பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பொதுத்துறை நிறுவனங்களால் இயக்கப்படும் பாரம்பரிய எரிவாயு வயல்களில் இருந்து பெறப்படும் இயற்கை எரிவாயுவின் விலை ஒரு யூனிட்டுக்கு (mmBtu) $6.41-இல் இருந்து $6.75-ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில், உலக சந்தையில் விநியோக சிக்கல் குறித்த அச்சம் எழுந்ததால், கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்தன. இதனால் எண்ணெய் சந்தையில் சில நேரங்களில் நம்பிக்கை அதிகரித்திருந்தது. ஆனால், கடந்த வாரம் இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், பிறகு எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட அனைத்து லாபங்களும் தள்ளிப்போனதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், எண்ணெய் சந்தையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தையின் எதிர்காலப் பாதை இன்னும் தெளிவாக இல்லை என்பதும் கணிக்கப்பட்டுள்ளது.

Administered Price Mechanism (APM) என்ற விலை நிர்ணய முறையை மாதந்தோறும் அரசு திருத்தும். இந்த திருத்தம், முந்தைய மாதத்தின் சராசரி எண்ணெய் விலையைப் பின்பற்றி நடைபெறும். இது எண்ணெய் விலையின் 10% ஆக இருக்கும். ஆனால் அதிகபட்சம் ஒரு mmBtuக்கு $6.75-க்குள் இருக்கும். எரிவாயு விலை ஜூலை மாதம் எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்ட போது, ஒரு mmBtuக்கு $6.89 என வந்துள்ளது. ஆனால், பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த விலை $6.75-க்கு மேல் உயராது என தெரிவித்துள்ளது.
இந்த விலை, Oil and Natural Gas Corp (ONGC) and Oil India இந்தியா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு பொருந்தும். இது, எண்ணெய் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது நகர எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளூர்ப் பயன்பாட்டாளர்களின் லாபத்தை குறைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 2023ஆம் ஆண்டுக்கு முன்பு, இயற்கை எரிவாயுவுக்கு எந்த உச்சவரம்பு விலை இருந்ததில்லை. இதனால் நுகர்வோர்கள் குறைந்த விலையில் இருந்து பயனடைந்தனர். ஆனால், புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்த பிறகு, எரிவாயு விலைகள் பொதுவாகவே அதிகரித்துள்ளன. இதனால், எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் தொழில்துறை பயனர்கள் லாபம் குறைவதால் கவலை அடைந்துள்ளனர். அதே நேரத்தில், எரிவாயு உற்பத்தியாளர்கள் அதிக லாபம் பெறுவதற்கும் இது காரணமாக உள்ளது.
பழைய இயற்கை எரிவாயு பெரும்பாலும் நகர எரிவாயு தளங்கள் மூலம் CNG மற்றும் PNG ஆக வழங்கப்படுகிறது. இதை உற்பத்தி செய்யும் உர தொழிற்சாலைகளும் பயன்படுத்துகின்றன. எரிவாயு விலை உயர்வால், தங்கள் தேவையின் 40% முதல் 50% வரை பழைய எரிவாயுவை பயன்படுத்தும் CNG ஆபரேட்டர்களின் லாபம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்த அதிக செலவை நுகர்வோருக்கு மாற்றி விலையை உயர்த்துவார்களா அல்லது எண்ணெய் விலை குறையும் வரை விலையை மாற்றாமல் இருப்பார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மற்றபடி, அரசு வழங்கும் சலுகையால் உரத் துறை இந்த விலை உயர்வின் பாதிப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்



Click it and Unblock the Notifications