பெங்களூரு: நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனர் ரகுநந்தன் காமத் வெள்ளிக்கிழமை அன்று காலமானார். இதனை சனிக்கிழமை அன்று நிறுவனம் தனது அதிகாரபூர்வ X தளத்தில் தெரிவித்துள்ளது. அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தனது கடின உழைப்பாலும், முயற்சியாலும், இந்தியாவின் மிகப் பிரபலமான ஐஸ் க்ரீம் பிராண்டை உருவாக்கியவர்.
நிறுவனம் வெளியிட்ட போஸ்டில் "எங்கள் நிறுவனர் ரகுநந்தன் காமத்தின் மறைவால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். இது எங்கள் அனைவருக்கும் மிகவும் துரதிர்ஷ்டவசமான நாள். அன்புடன், நேச்சுரல்ஸ் குடும்பம்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ரகுநந்தன், தனது தந்தையிடமிருந்து சிறந்த பழங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதைக் கற்றுக் கொண்டார். தன்னுடைய 14வது வயதில் அவரது அண்ணனின் உணவகமான 'கோகுல் ரெஃப்ரெஷ்மென்ட்ஸ்' என்ற ஹோட்டலில் சேர்வதற்காக தனது கல்வி படிப்பைப் பாதியிலேயே விட்டார்.
ஆனால் அங்கிருக்கும் போதில் இருந்து ரகுநந்தனுக்கு, தான் ஒரு ஐஸ்கிரீம் கடையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதைப் பற்றிய சிந்தனையுடனே சில நாட்களை அந்த கடையில் கழித்துள்ளார்.
சகோதரர்களுக்கான சொத்து பிரிந்தபோது, அவர் தன்னுடைய தொகையான ரூ. 3, 50,000 பயன்படுத்தி தனது தொழிலைத் தொடங்கினார். ஆறு ஊழியர்களுடன், ரகுநந்தன் "நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம்" என்ற பிராண்டை மும்பையின் ஜூஹூ புறநகர்ப் பகுதியில் தொடங்கினார். அங்கு அவர்கள் தொடங்குவதற்கு 12 சுவைகளுடன் தொடங்கினார்கள், மேலும் காலப்போக்கில் மேலும் பல சுவைகளைச் சேர்த்தனர். முதலில் 12 ப்ளேவர்களில் அங்கு ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்பட்டது. மேலும் இந்தியாவின் ஐஸ் கிரீம் மேன் என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் ரகுநந்தன்
மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கடை, அதன் இயற்கையான சுவையால் அனைவரின் உள்ளங்களையும் வென்றது. எந்த ரசாயனப் பொருட்களையும் பயன்படுத்தாமல், தூய பழச்சாறுகளை கொண்டு தயாரிக்கப்பட்ட ஐஸ் க்ரீம், மக்கள் மத்தியில் விரைவாகப் பிரபலமானது.
ரகுநந்தன் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்கள் சர்க்கரை பால் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். கடந்த 39 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் நாவில் நடனமாடச் செய்யும் ஐஸ்கிரீம் பிளேவர்களை வடிவமைத்தார். இந்த பிராண்டின் ஸ்லோகன் "டேஸ்ட் தி ஒரிஜினல்" என்று சொல்லப்படுகிறது.
அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து நேச்சுரல்ஸ ஐஸ் கிரீம் மெனு விரிவுபடுத்தப்பட்டது. வெள்ளரிக்காய் முதல் பல பழ வகைகளை வைத்து வழக்கத்திற்கு மாறான சுவைகளை நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் வழங்கியது. ஒவ்வொரு சுவையும் அனைத்து வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இல்லை என்றாலும், பிராண்டின் நற்பெயருக்கு பங்களிக்கும் வகையில் புதுப்புது ஃப்ளேவர்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தது.
பின்னர் நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் விரிவுபடுத்தப்பட்டதும், ரகுநந்தன் தனது பிராண்டுக்கு தேவைப்படும் பழங்கள், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றைத் தேர்வு செய்வதில் கவனமாக இருந்தார். நாசிக்கிலுள்ள ஒரு நம்பகமான பால்பண்ணையில் இருந்து பால் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள நம்பகமான சப்ளையர்களைவிடமிருந்து பழங்களைப் பெற்றார்.
டேஸ்ட் அட்லஸ் அறிக்கையின்படி உலகின் மிகச்சிறந்த 100 ஐஸ்கிரீம்களில் நேச்சுரல்ஸ் ஐஸ் கிரீம்-இன் இளநீர் கொண்டு செய்யப்படும் ஐஸ்கிரீமும் ஒன்று.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications