அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம் பிள்ளை: இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு?

இயற்பியல் , வேதியியல் உள்பட பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் உயரிய விருதாக நோபல் பரிசுகள் கருதப்படுகின்றன. குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே இருக்கும்.

நடப்பாண்டிற்காக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நவநீதம் பிள்ளை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இவரை நவி பிள்ளை என்றும் அழைக்கின்றனர். மனித உரிமைகள் சார்ந்து இயங்கும் அனைவருக்கும் நவநீதம் பிள்ளை என்ற பெயர் மிகவும் பரீட்சயம். நவநீதம் பிள்ளைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு சிறப்பு தொடர்பு இருப்பது தமிழ்நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம் பிள்ளை: இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு?

நவநீதம் பிள்ளை ஒரு தென்னாப்பிரிக்க தமிழர். தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் தமிழ்நாட்டிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள். 1890களில் நவநீதம்பிள்ளையின் தாத்தா , பாட்டி தமிழ்நாட்டில் இருந்து தென்னாப்பிரிக்காவின் நட்டால் பகுதியில் வேலைக்காக சென்றவர்கள், பின்னர் அங்கேயே செட்டிலாகிவிட்டனர். இவரது பெற்றோர் நாராயணசாமி - சாந்தம்மாவுக்கு 8 குழந்தைகள். அவர்களில் ஐந்தாவது குழந்தை தான் நவநீதம்பிள்ளை.

Also Read

சிறுவயது முதலே படிப்பில் சுட்டியான இவர் பல்வேறு கட்டுரைகளை எழுதி தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியுள்ளார். 1960களில் தென்னாபிரிக்கா வாழ் இந்திய சமூகத்தினரின் உதவியோடு பிஏ மற்றும் எல்எல்பி படிப்புகளை முடித்தார். பின்னர் ஹார்வர்டு சட்டப்பள்ளியில் டாக்டரேட் முடித்து சட்ட பணிகளை தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவின் நடால் மாகாணத்தில் சட்ட அலுவலகத்தை தொடங்கிய முதல் வெள்ளை இனத்தவர் அல்லாத பெண் வழக்கறிஞர், இவர். வழக்கறிஞராக இருந்த காலங்களில் நிறவெறி ஆட்சிக்கு எதிராக போராடிய அரசியல் கைதிகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடி வெற்றி பெற்றிருக்கிறார். அதன்பின் நீதிபதியாக பணியாற்றினார்.

2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவின் உயர் ஆணையராக பணியாற்றி உலகெங்கிலும் நடந்த போர், மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக தீவிரமாக செயல்பட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும், நீதிபதியாக பணியாற்றியவர். போர், இனவெறி உள்ளிட்டவற்றால் பாதிக்கபப்ட்ட மக்களுக்கு நீதி பெற்று தருவதில் சிறந்தவர்.

Recommended For You

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த போது அவருக்காக சட்ட உதவி செய்தவர், அதே போல இலங்கை தமிழர்களுக்காக பாடுபட்டவர். நவநீதம் பிள்ளை, தனது வாழ்நாள் முழுவதும் இனவெறி, பாலின பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச அளவில் குரல் கொடுத்த ஒரு ஆளுமை.

அமைதியான உலகம் வேண்டும் என்பவர்களுக்கு நீதியும் நேர்மையும் என்றைக்கும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் நவநீதம்பிள்ளை என நோபல் கமிட்டி பாராட்டியுள்ளது. இந்த ஆண்டில் நோபல் பரிசுக்காக 287 பேரின் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து நோபல் பரிசை பெற்றிருக்கிறார். டிசம்பர் 10ஆம் தேதி நார்வேயில் நடக்கும் நோபல் பரிசு விழாவில் இவர் பரிசை பெற இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+