அதானி குழுமத்தால் புதிதாக கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்துள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பிரைவேட் ஜெட் பயனர்களுக்கு தனி டெர்மினல் செப்டம்பர் 2026 முதல் தொடங்கும் என்று அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
பிரைவேட் ஜெட் விமானங்களுக்கான பார்கிங் ஹேங்கர்கள் கட்டுமானம் ஏற்கனவே தொடங்கியுள்ளது, அடுத்த சில மாதங்களில் முடிவடையும். இந்தியாவின் தனியார் விமான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது, 2025 தொடக்கத்தில் இந்தியாவில் சுமார் 150 முதல் 300 வரை தனியார் ஜெட்களும், ஜெட் மற்றும் ஹெலிகாப்டர்கள் சேர்த்து 550க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் உள்ளன.

தெற்காசியா பகுதியில், இந்தியாவில் தான் அதிகப்படியான பிரைவேட் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் சந்தை கொண்டது. இந்தியாவில் பொதுவாக தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் அவர்களுடைய பணிக்காக விரைவான மற்றும் தனிப்பட்ட பயணத்துக்கு பிரைவேட் ஜெட் விமானத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
இதில் முக்கியமாக நாட்டின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் தனியார் ஜெட்களை வைத்துள்ளனர். பிரபலங்கள் என பார்த்தால் ஷாருக் கான், நயன்தாரா, விஜய், அல்லு அர்ஜூன் போன்றோரும் தனியார் விமானங்களை சொந்தமாக வைத்துள்ளனர். இதேபோல் இந்தியாவில் பல பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்கள் அதன் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோர் விரைவான பயணம் மேற்கொள்ள தனியார் விமானங்களை வைத்துள்ளது. பல தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் பிரைவேட் ஜெட்-ஐ வாடகைக்கு விடும் சேவையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் அதானி குழுமம் மற்றும் மகாராஷ்டிரா அரசு கூட்டணியில் உருவான நவி மும்பை சர்வதேச விமான நிலையம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நாளில் இருந்து விமான சேவைகளை துவங்கியிருக்கும் வேளையில் பெரிய விமான ஆபரேட்டர்கள் தற்போது மும்பை விமான நிலையத்திலிருந்து நவி மும்பைக்கு மாற விரும்புகின்றனர்.
நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பிரைவேட் ஜெட் விமானங்களுக்கு தனி டெர்மினல் உருவாக்கப்படும் வேளையில், தற்போது விமான நிறுத்த இடங்களுக்கான விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. ஒரு பார்கிங் ஸ்லாட்க்கு 3 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.

தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர் பார்கிங் ஸ்லாட்க்கான விண்ணப்பங்களை செய்துள்ளனர் என்ற விபரம் வெளியாகிவில்லை. மேலும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் யார் யாரெல்லாம் விண்ணப்பம் செய்துள்ளார்கள் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும் மும்பைக்கு செல்லும் பிரலங்களுக்கு இனி நவி மும்பை விமான நிலையம் தான் முக்கிய டெர்மினலாக இருக்கும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் புதிய டாக்சிவே கட்டுவதற்காக தனியார் ஜெட் ஆபரேட்டர்களை பார்கிங் இடங்களை காலி செய்யக் கோரியது. ஆகஸ்ட் 1 முதல் ஹேங்கர்களை இடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் மழைக்காலம் காரணமாக தாமதமானது.
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 24 பிரைவேட் ஜெட் பார்கிங் இடங்கள் உள்ளன. நவி மும்பை விமான நிலையத்தில் 23-25 ஹேங்கர்களுடன் தொடங்கி, படிப்படியாக 89 ஹேங்கர்களாக விரிவாக்கப்பட உள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications