ரேமண்ட் குழும தலைவர் கௌதம் சிங்கானியா மனைவி நவாஸ் மோடி பிரிவதாக அறிவித்த நிலையில், நவாஸ் மோடி விவாகரத்தில் கௌதம் சிங்கானியாவின் மொத்த சொத்துக்களில் தனக்கும் தனது மகள்களுக்கும் 75 சதவீதம் வேண்டும் என கோரினார்.
இந்த நிலையில் நவாஸ் மோடி செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த மோசமான சம்பவத்தை குறித்து வெளிப்படையாக பேசினார், கடந்த வாரம் தீபாவளி பண்டிகையின் போது நடந்த பார்ட்டியில் கௌதம் சிங்கானியா நவாஸ் மோடியை வீட்டுக்குள் அனுமதிக்காததால் நவாஸ் மோடி ரோட்டில் உட்கார்ந்த போட்டோ, வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது.

இதற்கு முன்பு செப்டம்பர் 10 ஆம் தேதி கௌதம் சிங்கானியா தன்னையும், தன்னுடைய மைனர் குழந்தையையும் உடல்ரீதியாக தாக்கியதை அடுத்து அம்பானிகள் தன்னை காப்பாற்ற வந்ததாக கூறியுள்ளார்.
செப்டம்பர் 10 ஆம் தேதி காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் பிறந்தநாள் விழா முடிந்ததும் கௌதம் சிங்கானியா தன்னையும், தன்னுடைய மைனர் மகளான நிஹாரிகாவையும் அடித்து துன்புறுத்தியதாகவும், இந்த மோசமான நிகழ்வில் இருந்து தங்களை காப்பாற்றியது நீதா அம்பானியும், அனந்த் அம்பானியும் தான் என வெளிப்படையாக பேசியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
கௌதம் சிங்கானியா என்னுடைய மகளான நிஹாரிகா-வை சுமார் 15 நிமிடம் அடித்தார், பாதுகாப்புக்காக வீட்டின் ஒரு அறையில் தஞ்சமடைந்து, உதவிக்காக போலீசாரை அணுக முயன்ற போது எவ்விதமான உதவியும் கிடைக்கவில்லை, கௌதம் சிங்கானியா அப்போது போலீஸ் எல்லாம் என்னுடைய பாக்கெட்டில் இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
செப்டம்பர் 10 சம்பவத்தை நவாஸ் மோடி ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பகிர்ந்தார், கௌதம் சிங்கானியா தாக்குதலுக்கு பயந்து வீட்டின் ஒரு அறையில் சென்று பூட்டிக்கொண்ட நிலையில்.. இந்த நேர்காணலில் "நான் என் தோழி அனன்யா கோயங்கா-விற்கு போன் செய்தேன். எங்களுக்கு உதவ போலீஸ் வரப்போவதில்லை என்று அவள் எண்ணினாள், காரணம் கௌதம் சிங்கானியா எல்லாவற்றையும் சமாளித்து இருப்பான். 'நானும் ஆனந்தும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் அங்கே வருவோம்' என்று அனன்யா சொன்னாள்," என்று இந்த பேட்டியில் நவாஸ் மோடி கூறினார்.
இதேவேளையில் மகள் நிஹாரிகா தனது நண்பரான சிங்கானியாவின் முக்கிய உறவினரான திரிஷாகர் பஜாஜின் மகன் விஸ்வரூப்பை அழைத்துள்ளார். நிஹாரிகா, விஸ்வரூப்-யிடம் உடனே உங்க அப்பாவை கூட்டிக்கிட்டு இங்க வா என அழைத்துள்ளார். அப்போது திரிஷாகர் பஜாஜ், விஸ்வரூப் ஆகியோரும் அந்த பிறந்த நாள் பார்ட்டியில் இருந்துள்ளனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் நீதா அம்பானி மற்றும் அனந்த் அம்பானி என்னை தொடர்பு கொண்டனர். அவர்களுடைய மொத்த குடும்பமும் எங்களுக்கு உதவியது, போலீஸ் அதிகாரிகளை கௌதம் சிங்கானியா கட்டுப்படுத்தினாலும் அம்பானி குடும்பம் எங்களை காப்பாற்ற போலீஸ் அதிகாரிகளை அனுப்பியது.
அப்போதும் கௌதம் சிங்கானியா போலீஸ் அதிகாரிகள் JK House-க்குள் வருவதை தடுக்க முயற்சி செய்தார், ஆனால் அம்பானி குடும்பத்தின் உதவியால் போலீஸ் அதிகாரிகள் கௌதம் சிங்கானியா பேச்சை கேட்காமல் அவரை முடக்கி உட்கார வைத்தது. புகார் கொடுக்க வேண்டாம் என கௌதம் சிங்கானியா கேட்டுக்கொண்டார், ஆனால் அம்பானி குடும்பம் கட்டாயம் புகார் பதிவு செய்ய வேண்டும் என போலீஸாரிடம் உறுதி செய்தது என நவாஸ் மோடி கூறினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications