ரேமண்ட் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கெளதம் சிங்கானியா தனது மனைவி நவாஸ் மோடி சிங்கானியாவுடனான 32 வருட திருமண வாழ்க்கை முறித்துக்கொண்டதாக டிவிட்டரில் தெரிவித்த நாளில் இருந்து இவருடைய திருமண வாழ்க்கை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இது மட்டும் அல்லாமல் தீபாவளி பார்ட்டிக்கு கெளதம் சிங்கானியா தங்கியிருந்த வீட்டுக்கு பல பிரபலங்கள் வந்திருந்த நிலையில், நவாஸ் மோடி-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு சென்ற போதிலும் வீட்டின் செக்யூரிட்டி அதிகாரிகள் அவரை உள்ளே விடாமல் வெளியே நிற்க வைத்த நிலையில் ரோட்டில் உட்கார்ந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது.

கெளதம் சிங்கானியா தனது பதிவில் இருவரும் தனியாக பிரிவது குறித்து மட்டுமே பேசிய நிலையில் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார் அவருடைய முன்னாள் மனைவி நவாஸ் மோடி. இந்த நிலையில் நவாஸ் மோடி தனக்கும் தன் பிள்ளைகளின் வாழ்க்கைமற்றும் எதிர்காலத்திற்காகவும் கெளதம் சிங்கானியா-வின் 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பில் 75 சதவீத தொகையை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவாஸ் மோடி-யின் கோரிக்கையை கெளதம் சிங்கானியா ஏற்றுள்ளதாக கூறப்படுவதாக ஈடி பத்திரிக்கை தெரிவித்திருக்கும் வேளையில், தனது சொத்துக்களை பகிர குடும்ப டிரஸ்ட் அமைப்பை உருவாக்கி அதில் குடும்ப சொத்துக்களை பரிமாறி அதன் மூலம் சொத்துக்களை பகிர உள்ளதாக தெரிகிறது.
மேலும் இந்த குடும்ப அமைப்புக்கு ஒரேயொரு டிரஸ்டி நியமிக்கப்படுவதாகவும், அதுவும் கெளதம் சிங்கானியா இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மரணத்திற்கு பின்பு சொத்துக்களை அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த கட்டமைப்பை நவாஸ் மோடி ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது. கெளதம் சிங்கானியா குடும்பத்தில் ஏற்கனவே , JK Trusts, Smt Sunitidevi Singhania Hospital Trust இவ்விரண்டிலும் கெளதம் சிங்கானியா சேர்மன் மற்றும் மேனேஜிங் டிரஸ்டியாக இருக்கும் வேளையில், நவாஸ் மோடி வெறும் டிரஸ்டியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications