முகேஷ் அம்பானி 116.1 பில்லியன் நிகர சொத்து மதிப்பை கொண்டுள்ள உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அம்பானி வீட்டில் நயன்தாரா என்ற உடன் நம்ம ஊரு லேடி சூப்பர்ஸ்டார் என நினைக்க வேண்டாம்.
அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, பிள்ளைகள் இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானியும் பணக்காரர்களாக உள்ளனர். இவர்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால் அம்பானி குடும்பத்தில் அதிகம் தெரியாத, அறியப்படாதவர்களில் ஒருவர் நயன்தாரா கோத்தாரி. இவர் முகேஷ் அம்பானியின் மருமகள் ஆவார்.

யார் இந்த நயன்தாரா கோத்தாரி?: கோத்தாரி ஷுகர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் மறைந்த தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஷ்யாம் கோத்தாரியின் மகள் நயன்தாரா கோத்தாரி. முகேஷ் அம்பானியின் சகோதரி நினா கோத்தாரியின் மகள். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் மறைந்த திருபாய் அம்பானியின் முதல் பேத்தி இவர்.
கோத்தாரி ஷுகர்ஸ் நிறுவனத்தின் தலைவராக நயன்தாராவின் தாய் நினா கோத்தாரி உள்ளார். நிர்வாக இயக்குநராக நயன்தாராவின் சகோதரர் அர்ஜுன் கோத்தாரி பதவி வகிக்கிறார். கோத்தாரி ஷுகர்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.435 கோடி ஆகும்.
நயன்தாராவின் கல்வி: அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நயன்தாரா படித்தார்.
நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் குடும்பம்: 2013 ஆம் ஆண்டில் நயன்தாரா கோத்தாரி ஷமித் பார்தியாவை திருமணம் செய்து கொண்டார். ஷமித் பார்த்தியா ஒரு மீடியா டைகூன் மற்றும் பிரபல தொழிலதிபர்.
பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டதால் இருபெரும் செல்வாக்கு மிக்க குடும்பங்கள் இணைந்தன. ஜுபிளியன்ட் இண்டஸ்ட்ரீஸின் செயல்படாத இயக்குநராக ஷமித் பார்த்தியா உள்ளார்.
ஜுபிளியன்ட் இண்டஸ்ட்ரீஸை அவரது பெற்றோர் ஷ்யாம் சுந்தர் பார்த்தியாவும் தாய் ஷோபனா பார்த்தியாவும் நிர்வகித்து வருகின்றனர்.
அம்பானி குடும்பத்தாருடன் நெருக்கமான உறவில் நயன்தாரா உள்ளார். அவரது பாட்டியான கோகிலாபென் அம்பானி, இஷா அம்பானி ஆகியோருடன் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அவரது திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியை முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சேர்ந்து வெகு விமரிசையாக நடத்தினர். இதில் பல பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications