கோவை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீப காலமாகப் பல தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து அசத்தி வருகின்றனர். இவர்களது முக்கியமான முதலீடாகப் பார்க்கப்படுவது டிவைன் புட்ஸ் முதலீடு தான். இதை தொடர்ந்து சமீபத்தில் ஸ்டார்ட்அப் முதலீடு குறித்து சமீபத்தில் தைரோகேர் வேலுமணி அவர்களைச் சந்தித்து பலதரப்பட்ட அறிவுரைகளைப் பெற்று ஸ்டார்ட்அப் துறையில் முழுநேர முதலீட்டாளராக மாறியுள்ளனர்.
இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தற்போது கோயம்புத்தூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Ticket9 என்னும் நிறுவனத்தில் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளனர். இது தமிழ்நாடு ஸ்டார்ட்அப் வட்டாரத்தில் முக்கிய பேசு பொருளாக மாறியுள்ளது.

யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் பிரேம்ராஜ் ஆகியோர் இணைந்து நிறுவிய Ticket9, ஈவென்ட் டெக் ஸ்டார்ட்அப் பிரிவில் இயங்கி வருகிறது. சிறிய, பெரிய என வித்தியாசம் இல்லாமல் அனைத்து வகையிலான ஈவென்ட்களை உருவாக்க, நிர்வகிக்க, விளம்பரப்படுத்த மற்றும் பணமாக்க உதவும் வலுவான SaaS தளத்தை வழங்குகிறது இந்த Ticket9 Event Tech ஸ்டார்ட்அப் நிறுவனம்.
Ticket9 நிறுவனம் தற்போது லைவ் நிகழ்ச்சிகளுக்கு சேவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒரு event management செயல்முறையில் அதிகப்படியான வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குவதை Ticket9 நிறுவனம் மேம்படுத்துகிறது, அதே நேரத்தில் மக்களுக்கு தங்களுக்கு அருகில் இருக்கும் நிகழ்வுகளை தெரிந்துகொள்ளவும், இதில் பங்கேற்கவும் உதவுகிறது.
Ticket9 அணி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரிடமிருந்து வெளிப்படுத்தப்படாத அளவிலான நிதியைப் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முதலீடு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
ஏனெனில் நட்சத்திர தம்பதி Ticket9-ஐ முதலீடு வாயிலாக ஆதரிப்பது மட்டுமல்லாமல், மூலோபாய முதலீட்டாளர்களாகவும் (strategic investors) இணைகின்றனர். இதன் மூலம் சினிமா துறையில் இவர்களுக்கு இருக்கும் தொழில் நிபுணத்துவம் மற்றும் செல்வாக்கை இந்நிறுவனத்திற்குக் கொண்டு வர முடியும்.
இந்த கூட்டணி Ticket9 வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், தமிழ்நாடு, இந்தியா மற்றும் வெளிநாட்டு நிகழ்வுகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு துறையில் சேவை அளிக்கும் வாய்ப்பை பெறும்.
இதுகுறித்து Ticket9 இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாகப் பதிவிட்டது, "தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரிடமிருந்து Ticket9 முதலீடு பெற்றிருப்பதை அறிவிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த முதலீடு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது, ஏனெனில் நட்சத்திர தம்பதி Ticket9-ஐ முதலீட்டு ரீதியாக ஆதரிப்பது மட்டுமல்லாமல், மூலோபாய முதலீட்டாளர்களாகவும் இணைகின்றனர்.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications